லாவணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


லாவணி (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • ”மராட்டிய மாநிலத்திலிருந்து தஞ்சாவூருக்கு மாராட்டியர்களால் கொண்டுவரப்பட்ட கலைதான் "லாவணி'. இக்கலை நானூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்ததாகும். தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் "லாவணி' பிரபலம். "லாவணி' என்பது நாற்று நடுதல் என்று பொருள்படும். வயலில் நடவு நடும் பெண்கள் தங்களின் உழைப்பின் களைப்பைப் போக்க பாடும் பாடல் எனவும் கூறலாம். "லாவணி' நாட்டுப்புற இசைக்கலையில் முக்கியமானதாகும். மாசி மாதம், மக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் "காம தகன விழா'வில் "லாவணி' நிகழ்த்தப்படும். ஆரம்பத்தில் "லாவணி'யைப் பாடுவதற்கும், அதை காண்பதற்கும் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். அதற்குக் காரணம், இந்த "லாவணி' என்பது காமச்சுவை நிறைந்த பாடல்களால் அதிகம் நிரம்பியிருந்தது என்பதால்தான். பிறகு, இந்த "லாவணி'யை வரையறை செய்த பிறகு, பெண்களும் அதிகம் பங்கேற்க ஆரம்பித்தார்கள். முதலில் இரு ஆண்கள் எதிர் எதிராக அமர்ந்து, "எரிந்த கட்சி', "எரியாத கட்சி' என்று பிரிந்து "லாவணி'யைப் பாடுவார்கள். இந்தப் பாடலின் முடிவில் காமன் எரிக்கப்படும் நிகழ்ச்சி "காம தகன விழா'வாக கொண்டாடப்படுகிறது.” (தேடல் வலைப்பதிவு)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---லாவணி--- DDSA பதிப்பு + வின்சுலோ + ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை

சொல் வளப்பகுதி

 :பாடல் - கச்சேரி - நிகழ்ச்சி - எதிர்ப்பாட்டு - ஏட்டிக்குப் போட்டி

"https://ta.wiktionary.org/w/index.php?title=லாவணி&oldid=980270" இருந்து மீள்விக்கப்பட்டது