வக்கு வகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வக்கு வகை

சொல் பொருள்

வக்கு – வழி; வாய்ப்பு, வகை – பிறர் உதவியாம் வகை.

விளக்கம்

‘வக்கு வகை’ என்பது ‘வழி வகை’ எனவும் படும். தம் பொருளால் வாழ்வு நடத்துதலும் பிறர் உதவியால் வாழ்வு நடத்துதலும் என இருவகை வாழ்வும் உண்டு. ஒருவர்க்கே ஒவ்வொரு காலத்தில் இவ்விருவகை வாழ்வும் இணைதலும் உண்டு. இவ்விரண்டு வகையாலும் நிரம்பாத வறிய வாழ்வு உடையவரை ‘வக்குவகை’ இல்லாதவர்’ என இகழ்வது வழக்கம். வக்கற்றவன், வகையற்றவன் என்பவை வக்கு வகைகளின் விரியாம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=வக்கு_வகை&oldid=1913088" இலிருந்து மீள்விக்கப்பட்டது