வடை மாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அனுமன்
சூரியனை பழமென்றெண்ணி விண்ணில் பறக்கும் அனுமன்
சூரியனின் சூடு பட்டு சிவந்த முகத்தோடு அனுமன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)

பொருள்[தொகு]

வடை மாலை

  1. அனுமனுக்கு அணிவிக்கப்படும் வடைகளாலான மாலை.


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the black gram + pepper mixed, thin indian donut fried in oil and offered to the hindu deity lord hanuman in worship, in the form of a garland


விளக்கம்[தொகு]

  • அனுமனுக்கு பக்தர்கள் செய்யும் பூசைகளில் வேண்டுதல் காரணமாகவோ, அல்லது வழக்கமாகவோ வடைகளால் கோக்கப்பட்ட மாலையை மூல விக்கிரகத்திற்கு அணிவித்து வழிபடுதல் ஒரு சிறப்பான முறையாகும்...அனுமனைத் தொழ பக்தர்கள் விழையும்போது இந்த வடை மாலை பூசை முறையை அவருக்கு உகந்தது என்று இயல்பாகவே தேர்ந்தெடுத்தாலும், இந்த வழக்கம் வந்ததற்கு ஒரு காரணமும் உள்ளது...
  • அனுமன் கைக்குழந்தையாக இருந்தபோதே வானத்தில் தெரிந்த செக்கச் சிவந்த சூரியனை ஒரு பழமென்று எண்ணிவிட்டார்...அந்தப்பழத்தை உண்ண அவாக் கொண்டு, வாயு புத்திரனானதால், உடனே வானில் படுவேகமாக சூரியனை நோக்கிப் பறக்கத் தொடங்கினார்...அதே நேரத்தில் இராகுவும் தன் தருமப்படி சூரியனைப் பிடித்து கிரகணக் காலத்தை உண்டுப் பண்ணக் கிளம்பினார்...ஆனால் காற்று மண்டலத்தில் அனுமனின் பறக்கும் வேகத்தால் இராகு சூரியனை நெருங்கவே முடியவில்லை..இந்த நிகழ்ச்சியின் விளைவாக இராகு அனுமனுக்கு ஓர் அங்கீகாரம் கொடுத்தார்...
  • அதாவது தனக்குப் பிடித்த தானியமான உளுந்தினால் எவரொருவர் உணவுப்பண்டத்தைத் தயாரித்து அனுமனுக்குப் படைத்து வணங்குகிறார்களோ, அவரை எந்தக்காலத்திலும் தான் பீடிப்பதில்லை என்றும், தன்னால் அவருக்கு இராகு தோசம் ஏற்பட்டிருந்தால் அது நீங்கிவிடும் என்றும் சொன்னார்...மேலும் அந்த உணவுப்பண்டம் தன் பாம்பு உருவத்தைப் போலவே வளைந்தும், நெளிந்தும் இருக்கவேண்டுமென்றார்...ஆகவேதான் உளுந்தினால் வடைகள் செய்து பாம்பின் உடம்பைப்போல தோன்றும் மாலை செய்து அனுமனுக்கு அணிவித்து பூசை செய்யப்படுகிறது...இராகு தோசத்தால் பாதிக்கப்பட்டவர் அனுமனுக்கு வடை மாலை அணிவித்துப் பூசை செய்தால் இராகு தோசம் நீங்கும்...அனுமன் மேற்கொண்ட சூரியனைப் பழமாக நினைத்து உண்ணும் முயற்சியில் அவருடைய முகம் சூரியனின் சூட்டால் சிவந்ததால்தான் அனுமனின் முகத்திலொரு பாகம் சிவப்பாகவே காணப்படுகிறது...
  • அனுமார் வடை...காண்க.[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வடை_மாலை&oldid=1252691" இலிருந்து மீள்விக்கப்பட்டது