வரிப்புலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வரிப்புலி--வங்கம்
வரிப்புலி--இந்தியசீனம்
வரிப்புலி--மலேயா
வரிப்புலி--சுமத்ரா
வரிப்புலி--சைபீரியா
வரிப்புலி--தென்சீனம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

விலங்கியல் பெயர்:Panthera tigris

வரிப்புலி பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. புலி
  2. ஒரி
  3. வேங்கை
  4. பெருநரி
  5. வரிமா

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. tiger
  • தெலுங்கு
  1. పెద్ద పులి...(பெ1-த்3-3-பு1-லி)
  2. పులి...(பு1-லி)
  • இந்தி
  1. बाघ....(பா3-க்4- )
  2. शेर....(ஸ்யேர்)

விளக்கம்[தொகு]

  • வரிப்புலி என்றால் சாதாரணமாக புலி என்று சொல்லப்படும் விலங்கேயாகும்...சிறுத்தைப் புலிகளிலிருந்து வேறுபட்டு, உடலெங்கும் நீண்ட கருவரிகளைக் கொன்டிருப்பதால் வரிப்புலி எனப்பட்டது....இந்தியாவின் தேசிய விலங்கு புலி....வங்க தேசம், வியத்னாம், மலேசியா, தென் கொரியா நாடுகளின் தேசிய விலங்கும் இதுவே....இவை இந்தோனேசியாவின் சில தீவுகள் உட்பட வங்காளதேசம், சைபீரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா எனப் பரவியிருந்து, தற்சமயம் வெகுவாகக் குறைந்துவிட்டன...இவைகளின் வாழ்விடங்களை மனிதனின் தேவைக்காக அழித்தல், மற்றும் இதன் தோல், பற்கள், நகங்கள் போன்ற உடற்பகுதிகளுக்காகவும், பரம்பரை சீன மருத்துவத்திற்காகவும் பெருமளவு புலிகளை வேட்டையாடல், வீரவிளையாட்டு என்று வேட்டையாடிக் கொல்லல் ஆகிய காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது...இதன் இறைச்சியை உண்போரும் உள்ளனர்...தற்போது புலியினம் முற்றிலுமாக அழியும் ஆபத்திலிருப்பதாக பிரகடனப்படுத்தப்பட்டு இவற்றை காப்பாற்றும் முயற்சியில் பல உலக நாடுகளும், அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன...புலிகளில் பலவித உட்கிளை இனங்கள் உள்ளன...முற்றிலுமாக அழிந்துபட்ட மூன்று இனங்கள் நீங்கலாக தற்சமயம் வாழும் கிளையினங்கள் ஆறு ஆகும்...அவை வங்கம், இந்தியசீனம்,மலேயா, சுமத்ரா, சைபீரியா, தென்சீனா வகைப் புலிகளாகும்...உலக அளவில் மீந்திருக்கும் புலிகளின் இயற்கையான வாழ்விடங்களைக் காக்கவும், புலிகளை முழு அழிவிலிருந்து காப்பாற்றும் அவசியத்தை உலக மக்களுக்கு உணர்த்தி ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்கி புலிகளைக் காக்கும் முயற்சிகளுக்கு ஆதரவுத் தேடவும், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 29-ம் நாள் அனைத்துலக புலிகள் நாள் அனுசரிக்கப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வரிப்புலி&oldid=1232434" இருந்து மீள்விக்கப்பட்டது