வரைமுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வரைமுறை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மதிப்பீடும் திட்டமிடுதலும்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. estimating and planning

விளக்கம்[தொகு]

  • வரையும் + முறையும் = வரைமுறை...வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி...சுமார் நூறு நபர்களுக்கு விருந்து கொடுக்கவேண்டும்... நூறு பேர்கள் என்று முடிவெடுப்பதே ஒரு வரை அதாவது எல்லை ஆகும்...ஒரு சமையற்காரரை அழைத்து ஆலோசித்தால் அவர் நூறு விருந்தினர் என்றால் எழுபது பேர்களுக்குச் சமைத்தால் போதும் என்பார்...அதற்கான மளிகை சாமான்கள், காய்கறிகள் மற்ற செலவினங்கள் இவ்வளவுதான் என்று அவரும் தேவைப்படும் பொருட்களுக்கு வரை நிர்ணயித்து அட்டவணைப் போட்டுக் கொடுக்கிறார்...ஆகவே இந்த விடயத்தில் இதுவே வரை அதாவது நடைமுறையில் 'மதிப்பீடு'...
  • விருந்தை குற்றம் குறைகள் இல்லாமல் எப்படி நடத்துவது...விருந்தில் என்னென்ன பதார்த்தங்கள் இருக்கவேண்டும்... அதற்கேற்ற மூலப்பொருட்கள் மதிப்பீட்டில் சேர்க்கப்பட்டனவா?...முதலில் எந்த பொருட்களை வாங்கவேண்டும்?...எப்போது வாங்கவேண்டும்?...அவைகளை எப்படிப் பத்திரப்படுத்தவேண்டும்?...விருந்துக்கு முன்னதாகவே செய்யவேண்டியக் காரியங்கள் என்னென்ன?...யார்யாருக்கு அழப்பிதழ் அனுப்பவேண்டும்/நேரில் கூப்பிடவேண்டும் முதலிய ஒன்றின்பின் ஒன்றாக ஒழுங்காகச் செய்யவேண்டியப் பணிகளில் கவனம் செலுத்துவர்...இதுவே இந்த விடயத்தில் முறை அதாவது நடைமுறையில் 'திட்டமிடுதல்'.
  • வரைமுறை என்றால் வரையும் அதாவது எழுதும் பத்ததி என்று பொருள் கொள்வோரும் உண்டு...

பயன்பாடு[தொகு]

  • வரைமுறை இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது...அவ்வாறு செய்தால் அந்தக் காரியம் குழப்பத்தில்தான் முடியும்...பண நட்டமும், மனஅமைதியின்மையும், சோர்வும்தான் மிச்சமாகும்...எந்தப் பெரிய காரியத்திற்கும் ஒரு மதிப்பீடும், திட்டமும் மிக மிக அவசியம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வரைமுறை&oldid=1218274" இலிருந்து மீள்விக்கப்பட்டது