வரையாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வரையாடு
பொருள்
Wiki-ta.jpg
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

வரையாடு , பெயர்ச்சொல்

  1. தமிழ்நாட்டின் மாநில விலங்கு
  2. காட்டாடு, குறும்பாடு
  3. மான் வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Nilgiri Tahr
  2. jungle sheep
  3. hemitragus hylocrius
விளக்கம்
  • வரையாடு = வரை + ஆடு; வரை என்பது குவடு, குன்று, மலை, மலையுச்சி ஆகியவற்றைக்குறிக்கும். ஆடு என்பது விலங்கினமான ஆட்டைக்குறிக்கும்.


பயன்பாடு
  • மரையா என்று சங்கப்பாடல்களில் சொல்லப்படும் விலங்கு வரையாடு என்று இன்று சொல்லப்படுகிறது. நீலகிரி டார் என்று அதற்கு பெயர். உயரமான மலைகளில் செங்குத்தான பாறைகளில் ஏறிச்செல்லக்கூடிய அபூர்வமான இந்த விலங்கை ஊட்டியின் கல்லட்டி போன்ற பகுதிகளில் நின்றால் தூரத்து மலைகளில் காணமுடியும். பேன் ஊர்வதுபோல மலைவிளிம்பு பாறைகளில் வரிசையாகச் செல்லும்.
  • இந்த ஆடு ஏறாத பாறைகள் இருக்கமுடியாது. இதன் பாதுகாப்பு முறையே உச்சிப்பாறை ஏறுவதுதான். ஆகவே இன்றும் ஒரு மலையை அதி உச்சி என்று சொல்ல வரையாடு ஏறா மலை என்று சொல்வதுண்டு (சூழியல்,கடிதங்கள், ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஓங்குமால்வரை வரையா டுழக்கலி னுடைந்துகு பெருந்தேன்(சீவக. 1559)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வரையாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :குறும்பாடு - மரையா - ஆடு - மான் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரையாடு&oldid=1199355" இருந்து மீள்விக்கப்பட்டது