வரை எனில் மலை என்றோரு பொருளுண்டு...இறைவன் திருமால் தன் கண்ணன் அவதாரத்தில் மழைக்கு அதிபதியான இந்திரனுக்கு மக்கள் தரும் சிறப்பு வழிப்பாட்டை நிறுத்தினார்...மக்கள் தத்தம் கடமைகளை ஒழுங்காகச் செய்துக் கொண்டிருக்க வேண்டுமேயன்றி, இயற்கையாக தானாகவே உண்டாகக்கூடிய மழை போன்ற நிகழ்வுகளுக்காக யாருக்கும் சிறப்புப் பூசை செய்யத் தேவையில்லையென்று உபதேசித்தார்...கடுங் கோபம்கொண்ட இந்திரன் பெரும் மழையையும், வெள்ளத்தையு முண்டாக்கி பேரழிவை/பேரிடரைத் தரமுற்பட்டார்...அப்போது திருமாலான கண்ணபிரான் மிகப் பெரியதாகவும், விசாலமானதாகவுமிருந்த கோவர்தன கிரி என்னும் மலையைத் தன் சுண்டு விரலால் அனாயாசமாகத் தூக்கி, அதனடியில் எல்லா மக்களையும், பசுக்களையும் அடைக்கலம் புகவைத்துக் காப்பாற்றி, இந்திரனுக்கு ஒரு நற்பாடம் புகட்டி, அவனுடைய தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தார்...இப்படி ஒரு வரையை (மலையை) தூக்கியதால் திருமால் வரையெடுத்தோன் என்றுக் கொண்டாடப்படுகிறார்...
மேற்கண்ட காரணத்தினால் கண்ணபிரானுக்கு கோவர்த்தனன், கோவர்த்தனதாரி என்னும் பெயர்களுமுண்டு...