விக்சனரி பேச்சு:கலந்துரையாடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் மொழியை தமிஸ் என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளீர்களே இதென்ன சீர்கேடு.

தமிழர் அல்லாத பிற நாட்டவர்க்க்கு எப்படி இந்தப் இணையம் தமிழ் மொழியினுடையது என்று விளங்கும். அவர்கள் தமிஸ் மொழி என்றுதான் விளங்கிக்கொள்வார்கள்.

தயவுசெய்து முகப்பில் உள்ள Tamiz என்ற ஆங்கிலச் சொல்லை Tamil என்று எழுதவும்.

நன்றி தமிழன் தமிழீழம்

உங்கள் கவனத்துக்கு நன்றி, தமிழன். tamil என்பது தமிழை ஆங்கிலத்தில் எழுதும் முறை. படிமத்தில் காணப்படுவது ஒலிப்பியல் முறை அடிப்படையில் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். பிழையாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுகிறேன்--ரவி 22:28, 8 செப்டெம்பர் 2006 (UTC)


இதில் எவ்வித சீர்கேடும் கிடையாது. இங்கே தமிழ் என்பது ஒலிப்பியல் முறையில் எழுதப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டிருப்பது உச்சரிக்கும் முறையே யல்லாமல், அதே பொருள் தரும் ஆங்கிலச் சொல் அல்ல. இங்கே தமிழ் என்பது மட்டுமன்றி, விக்சனரி என்பதும் ஒலிப்பியல் முறையில் எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கவும். தமிழை ஒலிப்பியல் முறையில் எழுதப் பல முறைகள் உள்ளன. வை z என்னும் குறியீடு மூலம் குறிப்பதுவும் ஒரு முறை. மதராஸ் பல்கலைக்கழக அகராதியின் இணையப் பதிவில் தமிழ் என்பது எழுதப்பட்டிருக்கும் முறையைக் கீழே பார்க்கவும்.

tamiz (p. 1756) [ tamiẕ ] n tami&lline; . perh. tami¹. cf. dramida. 1. Sweetness, melodiousness; inimai. (ping.) 2. Refined quality; nirmai. (ping.) 3. Tamil language, being divided into iyay-yami&lline;, icai-t-tami&lline;, nataka-t-tami&lline;; iyayyamiz, icaittamiz, natakat tamiz ena muvakaiyaka vazangkum mozi. 4. Tamil literature, Tamil work; tamiz nul. 5. The Tamils; tamizar. aruntami zayya layintilar (cilap. 26, 161). 6. The Tamil country; tamiznatu. tan tamiz vinainar (mani. 19, 19).

Mayooranathan 06:39, 9 செப்டெம்பர் 2006 (UTC)