விக்சனரி பேச்சு:துப்புரவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

முறிந்த ஒலிக்கோப்புகளை நீக்கல்[தொகு]

பல சொற்களில், முதலில் ஒலிக்கோப்புக்கான முறிந்த இணைப்புகள் உள்ளதால், அவற்றை முதலில் நீக்கலாமென எண்ணுகிறேன். 2014 ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டவற்றை, (பகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்) ஒரு முறை நோக்கிட கோருகிறேன். முறிந்த இணைப்புகளை நீக்கலுக்கான விக்கிவிதி உள்ள பக்கம் எங்குள்ளது? தருக. ஆயிரகணக்கானச் சொற்களில் மாற்றம் நிகழ்த்த உள்ளதால், பிறர் விக்கிநடைமுறையை எளிதில் புரிந்து கொள்ள, அந்த இணைப்பைத் தருவது மிகவும் அவசியம். --தகவலுழவன் (பேச்சு) 02:09, 20 மே 2016 (UTC)

முறிந்த இணைப்புகளை நீக்கலுக்கான விக்கிவிதி உள்ள பக்கத்தை நாமே உருவாக்கி கொள்ளவேண்டியதுதான். பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:54, 21 மே 2016 (UTC)

விசமத் தொகுப்புகள்[தொகு]

  • அதிக விசமத்தொகுப்பு உள்ள பக்கங்களை காப்புச் செய்தல். என்னும் குறிப்பு சரியானதா?...விசமத்தொகுப்பு ஏன் காப்புச் செய்யப்படவேண்டும் என்றுப் புரியவில்லை...காப்பு எனில் protection என்றுதான் அர்த்தமென்பது என் கருத்து...இது சரியெனில் விசமத்தொகுப்பு நீக்கப்படவேண்டுமேயன்றி காப்புச் செய்யப்படக்கூடாது!..--Jambolik (பேச்சு) 15:21, 20 மே 2016 (UTC)
ஏற்கனவே உள்ள பக்கங்களை மேலும் விசமத்தொகுப்பு செய்யாதவாறு பக்கம் காப்பு செய்யப்படுகிறது. புதிய பக்கத்தை உருவாக்கி விசம தொகுப்பு செய்தால் I.P. முகவரி பார்த்து நடவடிக்கை எடுக்கப்படலாம்.--பாலாஜி (பேசலாம் வாங்க!)
  • புரிகிறது..ஆனால் இந்த எண்ணத்தைப் போதிய சொற்களால் வெளிப்படுத்தவில்லை..அதிக விசமத்தொகுப்பு உள்ளப் பக்கங்கள் மேலும் விசமத்தனமாக்கப்படாமல் அவைகளைக் காப்புச் செய்தல் என்பது போன்றிருந்தால் நலம்...விசமத்தொகுப்புகளை நீக்கிவிடலாமே?...அவைகளை இன்னும் காப்பானேன்?...அத்தகைய சில தொகுப்புகளை எங்கு காணலாம்?..மேற்கண்டச் செய்தியை அனுப்பிய விக்கி யார்?..கையொப்பமிடவில்லை...--Jambolik (பேச்சு) 17:54, 21 மே 2016 (UTC)
  • விசமத்தொகுப்பைத் தடுப்பதற்காக காப்பு செய்யப்பட்ட பக்கங்கள் என்பது சரியாக இருக்கும்.--பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:51, 21 மே 2016 (UTC)
  • பக்கத்தில் மாற்றம் செய்துவிட்டேன். இப்பொழுது சரியான பொருள் விளங்கும் என்று நினைக்கிறேன். நன்றி. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:56, 21 மே 2016 (UTC)
  • பக்கத்தில் கண்ட மாற்றம் இன்னும் ஏற்புடையதாக யிருக்கிறது...நன்றி, வணக்கம்--Jambolik (பேச்சு) 21:23, 21 மே 2016 (UTC)