விசித்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

விசித்திரம் (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. surprise, wonder - அதிசயம்.
 2. something peculiar, novel, strange, queer ; peculiarity, novelty, queerness - வழக்கத்திற்கு மாறானது; புதிரானது; வினோதம்
 3. anything diversely coloured or curiously wrought - விசேட வேலைப்பாடு அல்லது நிறமுடை யது.
 4. that which is diverse - பலதிறப்பட்டது.
 5. great beauty, loveliness - பேரழகு
 6. show, pomp - வேடிக்கை
 7. workmanship of an artisan - கம்மத்தொழில்.
 8. self-conceit; arrogance - இறுமாப்பு
 9. greatness - மேன்மை
விளக்கம்
பயன்பாடு
 1. இவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம் உள்ளது. வழக்கமாக எல்லோரும் முன்னால் நடந்துபோவார்கள். ஆனால் கடந்த 1991ம் ஆண்டு முதல் இவர் பின்னாலேயே நடந்து வருகிறார். - He has a strange habit. Everybody walks forward, but since 1991, he only walks backward.
 2. என்ன விசித்திரம் பாருங்கள்! செய்கிறது திருட்டுத் தொழில்! அதிலே தான தர்மம் செய்து 'தர்மப் பிரபு' என்ற பட்டம் (காதறாக் கள்ளன், கல்கி)
 3. எங்கள் குடும்பத்திலேயே ஒரு விசித்திரம். சிலர் ஊமையாகப் பிறப்பார்கள்; மற்றவர்கள் இனிய குரல் படைத்திருப்பார்கள்; நன்றாய்ப் பாடுவார்கள் (பொன்னியின் செல்வன், கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

 1. இறைவனின் படைப்பில் நீ மட்டும் விசித்திரம் விழிகள் அறிந்த காதலை உதடுகள் மறைக்க (வைரமுத்து)
 2. முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று (பாடல்)
 3. இவை யென்ன விசித்திரமே (திவ். திருவாய். 7, 8, 2).
 4. விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் (திவ். இயற். பெரிய. ம. 30)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விசித்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசித்திரம்&oldid=486384" இருந்து மீள்விக்கப்பட்டது