விடிவுகாலம்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
விடிவுகாலம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- துன்பங்கள் தீரும் காலம்.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- the time when all problems & sufferings would come to an end.
விளக்கம்[தொகு]
- 'பேச்சு வழக்கு'...விடிவு + காலம் = விடிவுகாலம்...அதிகாலையில் சூரியன் தோன்றும்போது இருள் அகன்று, இருளினால் உண்டான அசௌகரியங்கள்/உபத்திரவங்கள் போய்விடுகின்றன...இதையே 'விடிவுகாலம் அல்லது 'விடியுங்காலம்' என்பர்...இந்தச்சொல்லை ஒருவரின் வாழ்க்கையில் பயன்படுத்தும்போது, அவருடைய துன்பங்கள் நீங்கும் காலத்தைக் குறிப்பிட பயன்படுத்துவர்.
பயன்பாடு[தொகு]
- முத்து குமரன் அநேக கஷ்டங்கள், துயரங்களை அனுபவித்து வருகிறார்...எந்த விதமான உதவியும் யாராலும் கிடைப்பதில்லை...அவருக்கு எப்போது ஒரு 'விடிவுகாலம்' பிறக்குமோ அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.