விதந்தோது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதந்தோது(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • இரண்டாவது விமர்சனம் பாப்லோ நெருதா ஹங்கேரி மீது 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற சோவியத் படையெடுப்பைக் கண்டிக்கவில்லை என்பதோடு,ஸ்டாலினது அத்துமீறல்களை நெருதா வெளிப்படையாகக் கண்டிக்காதது மட்டுமல்ல, ஸ்டாலின் மரணத்தின் போது அவரை விதந்தோதி ஒரு அஞ்சலிக் கவிதையையும் எழுதினார் என்பது.(திண்ணை)
  • பெரியாரை விதந்தோதி காந்தியை நிராகரிப்பது அல்லது காந்தியை விதந்தோதி, பெரியார்/அம்பேத்கர்/நேருவை நிராகரிப்பது - இரண்டையுமே முன் வைக்கப்படும் வாதங்கள், காரணங்கள், அவற்றின் பலங்கள்/பலவீனங்களின் அடிப்படையில்தான் மதிப்பிட முடியுமே ஒழிய, காந்தி அல்லது பெரியார் அல்லது அம்பேதகர் அல்லது நேரு ஆகிய ஆளுமைகளின் பிம்பங்களின் அடிப்படையில் அல்ல. (திண்ணை)
  • எங்கெல்லாம் போர்ப்பண்பாடு உள்ளதோ அங்கெல்லாம் உயிர்த்தியாகம் விதந்தோதப்பட்டிருக்கும். (அம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும், ஜெயமோகன்)
  • எப்போதுமே இருமைகளை (dichotomy) உருவாக்கிக் கொண்டு சிந்திப்பது சாமிநாதனின் பாணி. ..ஒரு பண்பாட்டுத் தளத்தில் அவர் விவாதத்திற்கு வரும்போது சாதகமான, படைப்புத்தன்மை உடைய ஓர் ஆற்றலை அடையாளம் காண்கிறார். படைப்புத்தன்மை இல்லாத எதிர்மறையான ஆற்றல் ஒன்றை வகுத்துக் கொள்கிறார். பின்னதைக் கடுமையாக எதிர்த்து முன்னதை விதந்தோதி முன்வைக்கிறார். மொத்தச் சூழலையுமே இவ்விரு ஆற்றல்களின் மோதல் களமாக உருவகித்துக் கொள்கிறார். (வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 3, ஜெயமோகன்)

(இலக்கியப் பயன்பாடு)

வித - ஓது - விதப்பு - விதந்து - பாராட்டு - # - #

ஆதாரங்கள் ---விதந்தோது--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதந்தோது&oldid=973460" இலிருந்து மீள்விக்கப்பட்டது