விரிச்சி கேட்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


விருச்சி கேட்டலுக்கான நிமித்தங்களை எடுத்துரைக்கும் ஒரு முதியவர்
பொருள்

விரிச்சி கேட்டல், பெயர்ச்சொல்.

  • ஒரு காரியத்தை செய்யக் கிளம்பும் முன், அதை அறியாத ஒருவர் பேசும் நற்சொல் காதில் விழுந்தால் நல்லது என்பது பழந்தமிழர் நம்பிக்கை. அவ்வாறு காத்திருத்தல் விரிச்சி கேட்டல் எனப்படும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் looking for verbal portents; the practice of waiting to hear a positive verbal portent before heading out on a new venture
விளக்கம்
  • தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டு நிற்றலை விரிச்சி கேட்டல் என்பர். முல்லை நிலப் பெண்டிரிடம் விரிச்சி கேட்கும் பழக்கம் இருந்ததை முல்லைப்பாட்டு உணர்த்துகிறது. (விரிச்சி கேட்டல்)
பயன்பாடு
  • பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச் (முல்லைப்பாட்டு, 7-11)
(இலக்கியப் பயன்பாடு)
  • திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப (நற்றிணை 40)
(இலக்கணப் பயன்பாடு)
  • புள்ளும் ஓராம், விரிச்சியும் நில்லாம் (குறுந்தொகை 218)
(இலக்கணப் பயன்பாடு)




( மொழிகள் )

சான்றுகள் ---விரிச்சி கேட்டல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=விரிச்சி_கேட்டல்&oldid=1920138" இலிருந்து மீள்விக்கப்பட்டது