விழுமியம்
Appearance
விழுமியம் (பெ)
- மதிப்புகள் - - இது நேரடி மொழிபெயர்ப்பு. இதற்குச் சரியான பதம்: பழக்க வழக்கங்கள். அதிலும் "நற் பழக்க வழக்கங்கள்" இன்னும் பொருத்தமாக இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- விழுமியம் என்றால் values...உலகம் முழுக்க அறநெறிகள் பல உள்ளன. நீதிகள் உள்ளன. ஆசாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகச் சுட்டக்கூடிய சொல்லே விழுமியம். அவை மக்கள் வாழ்ந்து அறிந்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச்செல்லும் நெறிகள் குறித்த நம்பிக்கை மற்றும் மனக்கட்டுமானமே விழுமியம் என்பது (கலைச்சொற்கள் பற்றி…, ஜெயமோகன்)
பயன்பாடு
- தனிமனித விழுமியம் - individual values
- பண்பாட்டு விழுமியம் - cultural values
- காந்திய விழுமியங்கள் - Gandhian values
- நட்பு, பாசம், காதல், தியாகம் எனத் தமிழ்ப்பண்பாட்டின் பெரும்பாலான விழுமியங்கள் கம்பனின் வரையறைகள் வழியாகவே இன்றும் தமிழில் வாழ்கின்றன. ..கற்பு என்ற விழுமியத்தை சிலப்பதிகாரம் நிறுவியது. (வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல் 2, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---விழுமியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி