வெண்புரவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வெண்புரவி
பாற்கடலில் தோன்றிய உச்சைசுரவஸ்-- ஏழுதலையுடைய வெண்புரவி
திருமாலின் வெண்புரவி அவதாரம் ஹயக்ரீவர்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வெண்புரவி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. வெள்ளை நிறத்துக் குதிரை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. white coloured horse

விளக்கம்[தொகு]

  • வெண் + புரவி : பொருள் = வெள்ளை நிறம் + குதிரை = வெண்புரவி...குதிரை இனங்களில் முழுவதும் வெள்ளை நிறம் கொண்ட குதிரைகளைக் காண்பது மிக அரிது...இன்றும் உலகில் ஆங்காங்கே காணப்படுகிறது...வெண்ணிறம்/ சாம்பல் நிறக் குதிரையை வெண்புரவி என்பர்...கலாசார ரீதியாக உலகின் அநேக பாரம்பரியங்களின் புராணங்களில் பெரிதும் பேசப்படுகிறது...ஐரோப்பிய நாடுகள்,ஆதி அமெரிக்கர், இரான்,சீனா, கொரியா, ஃபிலிபைன், வியத்னாம் போன்ற இடங்களின் புராணம், கலாசாரத்திலும் பௌத்தம், கிறித்துவம்,இந்து முதலிய மதங்களிலும் வெகுவாகக் குறிப்பிடப்படுகிறது...இந்து மதத்தைப் பொருத்தவரை சூரியனின் தேரை இழுத்துச்செல்லும் ஏழு குதிரைகளும் வெண்புரவிகளே...பண்டைய நாட்களில் பேரரசர்கள் தங்கள் கருவளத்திற்காகவும், அரச ஆதிபத்தியத்திற்காகவும் செய்த அசுவமேத யாகம் என்னும் மதச் சடங்கில் வெண்ணிறம்/ சாம்பல் நிறக் குதிரையை உயிர்பலிக் கொடுத்தனர்...புராணக்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது உச்சைசுரவஸ் (உச்சைஹ்ஸ்ரவஸ்) என்னும் ஏழுதலைகளுடைய வெண்ணிறக் குதிரையும் வெளிவந்தது...இந்தக் குதிரையை தேவர்களின் அரசனான இந்திரன் சிலவேளைகளில் தன் வாகனமாகப் பயன்படுத்தினார் என்றும் மேலும் மற்றுமொரு வெண்புரவியும் சூரியனுக்காக பாற்கடலிலிருந்து தனியாகத் தோன்றியது என்றும் சொல்லப்படுகிறது....
  • மேலும் இறைவன் திருமால் எடுத்த ஓர் அவதாரமான ஹயக்ரிவர் ஞானத்திற்கும், அறிவுக்குமான அவதாரம்...இந்தத் திருத்தோற்றத்தில் மனித உடலும், வெண்புரவி முகமும் கொண்டு வெண்ணுடையில், வெண் தாமரை மலரின் மேல் அமர்ந்து தரிசனம் கொடுப்பார்...இறைவன் திருமாலின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தின்போது அவர் வெண்புரவி உருவத்திலோ அல்லது வெண்புரவியின் மீதமர்ந்து ஓட்டியபடியோ தோன்றுவர் என்றுக் கூறப்படுகிறது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்புரவி&oldid=1222310" இலிருந்து மீள்விக்கப்பட்டது