வெளிறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெளிறு(வி)

  1. வெண்மையாகு
  2. நிறங்கெடு
    அவன் முகம் வெளிறிப்போயிற்று
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. grow white
  2. become pale
விளக்கம்
பயன்பாடு
  • வெளிறிப் போ - வெண்மையாகு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

வெளிறு(பெ)

  1. வெண்மை
    வெளிறு சேர்நிணம் (கம்பரா.கரன். 155).
  2. நிறக்கேடு
  3. வெளிச்சம்
    கதிர்வே றுணையா வெளிறுவிரவவருதிகண்டாய் (பதினொ. திருவாரூர்மும். 9)
  4. வெளிப்படுகை.
    வெளிறுற்ற வான்பழியாம் (திருக்கோ. 254).
  5. பயனின்மை.
    வெளிற்றுரை (சீவக.1431)
  6. அறியாமை
    ஆசற்றார் கண்ணும் . . . இன்மை யரிதே வெளிறு(குறள், 503).
  7. இளமை
    வெளிற்றுப் பனந்துணியின் (புறநா. 35)
  8. திண்மையற்றது.
    வெளிறானஇருளன்றிக்கே (ஈடு, 2, 1, 8).
  9. குற்றம்
    வெளிறில் வாள் (சீவக. 3074).
  10. வயிரமின்மை
    வெளிறி னோன்காழ்(புறநா. 23).
  11. வெளிற்றுமரம், அலிமரம்
    வெளிறுமுன் வித்திப் பின்னை வச்சிரம் விளைத்த லாமோ (சீவக.2613). (திவா. MSS.)
  12. நறுவல்லி, நறுவிலிமரம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. whiteness
  2. paleness; pallor
  3. light
  4. becoming clear or manifest
  5. uselessness
  6. stupidity, ignorance
  7. tenderness, youth
  8. that which is not dense
  9. fault, defect
  10. having no hard core
  11. soft, pithy tree without core
  12. common sebesten
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

வெளுப்பு - வெள்ளை - வெண்மை - வெளில் - வெளிது - வெளி - வெளிற்றுரை - வெளிற்றுமரம் - வெளிறர் - நறுவல்லி - நறுவிலிமரம்


( மொழிகள் )

சான்றுகள் ---வெளிறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளிறு&oldid=1013561" இலிருந்து மீள்விக்கப்பட்டது