తాడు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

తాడు:
கயிறு
తాడు:
பனை மரம்

பொருள்[தொகு]

  • తాడు, பெயர்ச்சொல்.
  1. கயிறு
  2. பனை

விளக்கம்[தொகு]

  • பொருட்களை அல்லது ஓரிடத்தின் வெவ்வேறுப் பகுதிகளை இணைத்துக் கட்ட, பலவிதமான வேலைகளில் பயன்படும் ஒரு சாதனம்...அநேக நீள அளவுகள், பருமன் வேறுபாடுகள், தாங்கும் திறன் ஆகியவைகளோடு வேலைக்கு ஏற்றவாறு கிடைக்கிறது...வீட்டு உபயோகத்திலும் துவைத்த துணிகளைக் காயப்போடுதல் போன்ற சிறு தேவைகளுக்குப் பயனாகிறது..இவை செய்யப்படும் மூலப்பொருட்களும் பல விதமான இயற்கை மற்றும் செயற்கை பொருட்களின் இழைகளாக அமைந்திருக்கின்றன..
  • நீண்டு, உயரமாக வளர்ந்து பற்பல விதங்களில் பயன் தரும் மரம் பனை..தமிழ் நாட்டு மாநில மரமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது...இம்மரத்தின் ஒவ்வொரு பாகமும் மிக பயனுள்ளதாக இருக்கிறது... கிராமப் பொருளாதாரம் மேம்பட பெரிதும் உபயோககரமாக பனை மரங்கள் விளங்குகின்றன...இம்மரத்திலிருந்து இறக்கப்படும் கள் பனங்கள் எனப்படும்..இதனைப் பருகி மனக்களிப்புக்கொள்வோர் எராளம்...மற்றும் பனம் வெல்லம், பனம் கற்கண்டு, நுங்கு, பதநீர் என உணவுப்பொருட்களும் பனையிலிருந்து கிடைக்கின்றன...பனை ஓலைகளைக்கொண்டு பாய், கூடை, விசிறி, பெட்டி போன்ற வீட்டு உபயோகச் சாதனங்களும் உண்டாக்கப்படுகின்றன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---తాడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తాడు&oldid=1637245" இலிருந்து மீள்விக்கப்பட்டது