free verse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

free verse (பெ)

  1. மரபுக்கவிதை போலல்லாது, யாப்பு விடுதலை பெற்ற கவிதை; புதுக்கவிதை
விளக்கம்
பயன்பாடு
  1. பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகப் பிரான்சு நாட்டில் புரட்சிகரச் சமுதாயம் தோன்றியது. பாதலேர், ரிம்போ, மல்லார்மே போன்ற புரட்சிக் கவிகள் பழைய மரபுகளை விட்டுவிட்டு யாப்பு விடுதலை பெற்ற புதிய கவிதைகளைப் பாட முற்பட்டனர். அவற்றை ஆங்கிலத்தில் Free verse என்றனர். (மரபுக்கவிதையும் புதுக்கவிதையும், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
  2. ஆங்கிலத்திலும், இதர மேனாட்டு மொழிகளிலும் Verse Libre அல்லது Free Verse என்று இன்னொன்றும் உண்டு. அதற்குத்தான் விதிகள் கிடையாது. எதுகை, மோனை, அளவு, சீர், தளை என்பன எதுவுமே கிடையாது அதற்கு. ஆனால் அதற்கும் இலக்கண அமைதி ஒன்றுண்டு. கூறும்பொருள் கவிதைத் தன்மை கொண்டதாயிருக்க வேண்டும். Cadense என்ற இன்னிசை அதில் ஒழுக வேண்டும். ([1]
( மொழிகள் )

ஆதாரங்கள் ---free verse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :verse - free - verse libre - blank verse - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=free_verse&oldid=1863744" இலிருந்து மீள்விக்கப்பட்டது