lion's share

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

lion's share:
எனில் பெரும் முன்னுரிமைப் பங்கு--படம்:பெண் சிங்கங்கள் வேட்டையாட, சும்மா பார்த்துக்கொண்டிருக்கும் ஆண் சிங்கம்
  1. lion's + share

பொருள்[தொகு]

  • lion's share, பெயர்ச்சொல்.
  1. noncount noun
  2. பெரும் பங்கு
  3. முன்னுரிமைப் பங்கு

விளக்கம்[தொகு]

  1. ஒரு விடயத்தின் பெரும்பங்கை தகுதி/உழைப்பு/உரிமை இல்லாமல் பெற்றுக்கொள்வதை/ஏற்றுக்கொள்வதை/உரிமையாக்கிக்கொள்வதை lion's share என்பர்.
  2. இந்தச் சொற்றொடர் ஏற்பட ஆண்சிங்கத்தின் இயல்பு காரணமாகிறது...பொதுவாக பெண் சிங்கங்கள் மாத்திரம்தான் இரைத் தேடி வேட்டையாடும்...ஆண்சிங்கங்கள் தேவைப்பட்டால் மட்டுமே பெண் சிங்கங்களோடு இணைந்து வேட்டையாடும்...அப்படி பெண் சிங்கங்கள் சேர்ந்து வேட்டையாடிக் கொன்ற விலங்கை, அந்தச் சிங்கக் குழுவில் சும்மாயிருந்த ஓர் ஆண் சிங்கம்தான் உழைத்தப் பெண் சிங்கங்களைத் துரத்திவிட்டு, முதன்முதலாக, தன் பசித்தீர பெரும் பங்கு உண்டுவிட்டுதான் அவ்விடத்தைவிட்டகலும்...அது விட்டச் சென்ற மிச்சம்மீதி இறைச்சிதான் மற்ற பெண் சிங்கங்கள் மற்றும் அதன் குட்டிகளுக்கு ஆகாரமாகும்...
  3. இப்படிப்பட்ட ஆண் சிங்கத்தின் இயல்புதான் lion's share என்னும் சொற்றொடருக்கு ஆதாரமாக அமைந்தது...தகுதியும், உழைப்பும், உரிமையு மில்லாமல் ஒருவர் ஒரு விடயத்தில் பெறும், பெரும்பங்கை முதலில் குறிப்பிட்டு, பின்னர் அதேமாதிரியான நிகழ்வுகளுக்கானப் பொருளாக விரிவுபடுத்தப்பட்டது...
  4. ஒரு சிங்கக்குழுவில் ஓர் ஆண் சிங்கமும், ஒன்றிற்கு மேற்பட்ட பெண் சிங்கங்களும், அவற்றின் குட்டிகளும் இருக்கும்...
( மொழிகள் )

சான்றுகோள் ---lion's share--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=lion%27s_share&oldid=1990188" இலிருந்து மீள்விக்கப்பட்டது