உள்ளடக்கத்துக்குச் செல்

morpheme

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

morpheme (பெ)

  1. ஒரு மொழியில் பொருள் உணர்த்தும் யாவற்றினும் மிகச்சிறிய அடிப்படைக் கூறு, மொழியணு அல்லது சொல்லணு அல்லது உருபன் இதனினும் சிறியதாக பகுத்தால் எப்பொருளும் தராத தனிச்சிறுங்கூறு. விளக்கம் பார்க்கவும்.
  2. மொழியியல். உருபன்
விளக்கம்

ஆங்கிலமொழியில் unkind என்னும் சொல்லை எழுத்துக்கொண்டால், kind என்பது அன்பான என்று பொருள்தரும் ஒரு சொல்லணு, un என்பது எதிர்மறைப் பொருள் தரும் சொற்கூறு; எனவே kind, un ஆகிய இரண்டு பகுதிகளும் மொழியணுக்கள் அல்லது சொல்லணுக்கள் அல்லது உருபன்கள் எனப்படுகின்றன . இவற்றை மேலும் பகுத்தால் (பிரித்தால்) பொருள் உணர்த்தாது; kind என்பதில் d என்னும் எழுத்தை நீக்கிவிட்டால் kin என்னும் பிரிதொரு சொல்லாகிவிடும். எனவே இரண்டு சொல்லணுக்களும் சேர்ந்து unkind என்றால் அன்பில்லாத அல்லது அன்பில்லாமல் என்று பொருள் படுகின்றது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=morpheme&oldid=1872806" இலிருந்து மீள்விக்கப்பட்டது