signet ring

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

signet ring:
ஓர் உரோமானியக் கணையாழி

பொருள்[தொகு]

  • signet ring, பெயர்ச்சொல்.
  1. (Signet + ring)
  2. கணையாழி

விளக்கம்[தொகு]

  1. கைவிரலில் அணியும், ஒருவருக்கு இருக்கும் அதிகாரத்தைக்காட்டும், கணையாழி என்னும் மோதிர வகை Signet ring எனப்படும்...ஓர் அரசனின் நம்பிக்கையைப்பெற்ற, அவனுடைய உறவினன், நண்பன் அல்லது அமைச்சர், படைத் தலைவன், இராஜகுரு போன்றவர்கள், அரசு அல்லது அரசனின் நலம் காக்க இடும் கட்டளைகளை, அரசனே சுயமாக இட்டதாகக்கொண்டு இதரர்கள் அதற்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும் என்பதற்காக, அரசனால் அளிக்கப்படும் ஓர் ஆபரணம்...இதில் அரசின்/அரசனின் இலச்சினை அல்லது முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும்...இதையே இராச முத்திரை என்றும் குறிப்பிடுவர்...இதைக் காண்பித்து இடப்படும் கட்டளை அல்லது சொல்லுக்கு, மறுப்பேச்சு பேசாமல், பிறர் கீழ்படிந்து நடக்கவேண்டும் என்பது ஒரு விதியாகவே இருந்தது...இந்தக் கணையாழி உள்ளவர்கள் அந்தந்த அரசனுடைய நம்பத்தகுந்த பிரதிநிதிகளாகவேக் கருதப்பட்டனர்.
  • signet ring (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---signet ring--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=signet_ring&oldid=1844947" இலிருந்து மீள்விக்கப்பட்டது