வழிமுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வழிமுறை (இ)

  • ...
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...வழிமுறை: புறநாநூற்றுப் பாடல்- 201 ல் புலவர் கபிலர்:

“ ....அந்தணன் , புலவன் , கொண்டுவந்தனனே நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே.. . " என ஒரு வேளிர்குடியைச் சேர்ந்தவரை அகத்தியரின் நாற்பத்தொன்பதாவது வழிமுறையில் வந்தவராகக் குறிப்பிடுகிறார். தலைமுறைக்கும் வழிமுறைக்கும் முற்றிலும் மாறுபட்ட பொருள் உள்ளதாகக் காட்டுகிறார். தலைமுறை என்பது தந்தை அவரது குழந்தை எனத் தொடர்ந்து செல்வதாகப் பொருள்கொள்கிறோம். ஆனால் வழிமுறை என்பது அப்படிப்பட்டதல்ல என்பதை மேற்கண்ட பாடல் உணர்த்துகிறது. அகத்தியராகத் தேர்வுசெய்யப்படுவோர் அவரது இருதிக்காலம் வரை அகத்தியராக இருந்ததாகத் தெரிகிறது. வழிவழியாக அகத்தியர்கள் இருந்ததாகவும் தெரிகிறது. அகத்தியராகத் தேர்வுசெய்யப்பட்டவர் செயல்படும் கால இறுதிவரை அகத்தியராக இருக்க அனுமதிக்கப்பட்டதாகக் கொள்ளலாம். தமிழர் என்போர் அகத்தியரைத் தமது முன்னோராகக் கொண்டு இருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது. ஆண்டுக்கணக்கீட்டில் 60 ஆண்டு கொண்டது ஒரு வழிமுறையாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. பஞ்சாங்கங்களில் 60 ஆண்டுகளைக் கொண்டது ஒரு வட்டமாக உள்ளது. அதனை ஏற்றுக்கொண்டால் 50ஆவது வழிமுறையில் 3000 ஆண்டுகள் முடிந்திருக்கவேண்டும். அதாவது கபிலர் வாழ்ந்த காலத்துக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் அகத்தியர் தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்பின்னர் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே முதல் வழிமுறை அகத்தியராகத் தேர்வுசெய்யப்பட்டவர் 5000 ஆண்டுகற்கு முற்பட்டவர் எனத் தெரிகிறது. கலியுகத்தின் துவக்ககாலம் எனக் கொள்ளலாம்.

பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வழிமுறை&oldid=1209783" இலிருந்து மீள்விக்கப்பட்டது