இதணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இதணம், பெயர்ச்சொல்.
  1. விளைநிலத்தில் உள்ள காவல் பரண்
  2. பணவை
  3. காண்க: இதண் (குறிஞ்சிப்.41)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A high shed with a platform secure from wild beasts
  2. watch-tower in a field
  3. A scaffold
  4. A raised platform

(இலக்கியப் பயன்பாடு)

  1. “கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த, 
     புலி அஞ்சு இதணம் ஏறி, அவண
     சாரல் சூரல் தகை பெற வலந்த,”-குறிஞ்சிப்பாட்டு : 40-41

     [பொருள்: பறவைகளின் ஒலி பேரொலியாகக் கேட்கும் மரத்தின் உச்சியில், புலிகள் வந்தால் காத்துக் கொள்வதற்காக, தினைக்காட்டினைக் காவல் செய்பவன் அமைத்த பரண் மீது ஏறி அமர்ந்து கொண்டோம்.]

    சூரியன் சுடும் மாலைநேரம்

  2. உதிட்டிரன்றருமராசனோதிமமுயர்த்தோன்வேதா
     இதைப்புனம்புதுக்கொல்லைக்காமிதணமேபணவைநாமம்
     திதிப்பிரகரணங்காத்தறிதலையென்பதுசுணங்கு
     பதத்திரியேவிகங்கம்பதப்பாடுமதிலுறுப்பே.”-சிந்தாமணி நிகண்டு 119

     உதிட்டிரன்-தருமன்; ஓதிமமுயர்த்தோன்-வேதா, பிரமன்‌; இதைப்புனம்-புதுக்கொல்லை; இதணம்‌-பரண், பணவை; திதிப்பிரகரணம்‌-காத்தல்; திதலை-சுணங்கு, தேமல்; பதத்திரி-விகங்கம், பறவை; பதப்பாடு-மதிலுறுப்பு

    சிந்தாமணி நிகண்டு 119

  3. “அண்ணல் யானைக்கு அன்றியும், கல் மிசைத்
     தனி நிலை இதணம் புலம்பப் போகி,
     மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை,”-நற்றிணை 194-195}}

     மலைமேலே சமைத்த தனியாக நிலைபெற்ற கட்டுப் பரண் வறிதாம்படி விடுத்துச் சென்று; மரமேறுந் தொழிலிலே சிறப்புடைய மந்திகளும்  நற்றிணை - 194

  4. “புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர்
     உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ”-மலைபடுகடாம் 204

     பிறந்த நிலையில் இருந்து மாறி,முற்றிய நிலையில் இருக்கும் புனத்தைக் காவல் காக்கக் குறவர்கள் சூழ்வார்கள். அவர்கள் உயர்வான ‘இதணம்’ என்னும் பரண் மேல் ஏறிக்,கையைக் கொட்டி

    கவண் @ மலைபடுகடாம்

  5. “மதுவூர்‌ குழலியும்‌ மாடும்‌ மனையும்‌
     இதுவூர்‌ ஒழிய இதணம்‌ தேறிப்‌
     பொதுவூர்‌ புறஞ்சுடு காடது நோக்‌கி
     மதுவூர வாங்கியே வைத்தகன்‌ றார்களே.”-(திருமந்திரம்‌-155)

    யாரால் என்ன செய்ய முடியும்

  6. “மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்
     நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும்
     வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,
     அம் சொல் கிளிகள், ஆயோ! என்னும் அண்ணாமலையாரே”-திருவண்ணாமலை பதிகம் 744

     [குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவர வரும் அழகிய சொற்களைப் பேசும் கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும்.]

    தேவாரம் - முதல் திருமுறை

  7. “கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்
     பா அமை இதணம் ஏறி, பாசினம்”-நற்றிணை 373

     [பின்னர் கருநிறக் காம்புகளுடன் பூத்திருக்கும் வேங்கை மரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதணம் என்னும் பந்தல் மேல் அவனுடன் நின்று கொண்டு,]

    நற்றிணை 373



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இதணம்&oldid=1988588" இலிருந்து மீள்விக்கப்பட்டது