ஐந்தாம் படை
Appearance
பொருள்
ஐந்தாம் படை, .
- ஒற்றர் படை; அஞ்சாம் படை (பேச்சு வழக்கு)
- ஒரு அமைப்பின் உள்ளிருந்து கொண்டே அதனைக் குலைக்க வேலை செய்யும் குழு
மொழிபெயர்ப்புகள்
- fifth column ஆங்கிலம்
விளக்கம்
- 1930களில் எசுப்பானிய நாட்டில் பாசிச ஆதரவாளர்களுக்கும் இடதுசாரி குடியரச வாதிகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது. எசுப்பானியத் தலைநகர் மட்ரீட் குடியரசப் படைகள் வசமிருந்தது. அதனை நோக்கி நான்கு பாசிசப் படைப்பிரிவுகள் முன்னேறிக் கொண்டிருந்தன. அப்போது பாசிஸ்டுகளின் தளபதி ஜெனரல் மோலா இந்த நான்கு படைகளைத் தவிர ஐந்தாம் படை ஒன்றும் மட்ரீட் நகரினுள் இருந்து கொண்டே பாசிஸ்டுகளுக்கு உதவுவதாக அறிவித்தார். அன்று முதல் “ஐந்தாம் படை” (fifth column) என்ற தொடர் ஆங்கிலத்தில் புழக்கத்தில் வந்தது. தமிழிலும் ஐந்தாம் படை / அஞ்சாம்படை என்று பயன்படுகிறது
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- இந்த மாதிரி ஐந்தாம் படை வேலை செய்யும் மட்டிப் பயல்களைக் கண்டாலே எனக்கு அடிமடியில் எரிகிறது (ஜீன் திருடனின் விநோத வழக்கு (மூலம் நான்ஸி க்ரெஸ்); தமிழில் : ராமன் ராஜா )
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐந்தாம் படை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற