மெய்க்காப்பாளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(மெய்க்காப்பாளர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆஃப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்ஃஜாய் அவர்களைக் காக்கும் மெய்க்காப்பளர்கள்
ஆஃப்கன் நாட்டில் பணியாற்றும் ஒரு குர்க்கா மெய்க்காப்பாளன்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மெய்க்காப்பாளன் (பெ)

  • உடற்காவலன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்: bodyguard

விளக்கம்
  • மெய் என்றால் உடலும் அதைச்சார்ந்த உயிரும் + காப்பாளன் என்றால் அந்த உடலை தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுபவன்.
  • சமூகத்தில் மிக முக்கியமான நபர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒன்றே மெய்க்காப்பாளன் என்னும் சேவகர்களை நியமிப்பது... இந்தச் சேவகன் ஆயுதம் ஏந்தி தான் யாருக்கு பாதுகாப்புக் கொடுக்க நியமிக்கப்பட்டாரோ அவரின் பக்கத்திலேயே எப்போதும் பதிலடி கொடுக்கும் ஆயத்த நிலையில் சதா சுற்றுமுற்றும் நோட்டம் பார்த்துக்கொண்டு பாதுகாப்பு கொடுப்பார். ஏதாவது தாக்குதல் நடந்தால் எதிர்த் தாக்குதல் நடத்தி தான் பாதுகாக்கவேண்டியவரைக் காப்பாற்றுவார். இந்தச் செயலில் சிலசமயம் மெய்க்காப்பாளன் மரணிப்பதும் உண்டு.
  • முக்கியமான அரசியல் தலைவர்களுக்கும், அரசில் முக்கிய பதவி கொண்டோருக்கும் அவர்களுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாக்க அரசாங்கமே தன் செலவில் மெய்க்காப்பாளனை நியமிக்கும். வேறு சில வசதி படைத்தோர் தங்கள் சொந்த செலவிலேயே மெய்க்காப்பாளனை நியமித்துக்கொள்ளுவார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்க்காப்பாளன்&oldid=1214990" இலிருந்து மீள்விக்கப்பட்டது