பேச்சு:கீல்பூசுதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

(படம்-->படவார்ப்புருவுக்கு மாற்றப்படுகிறது. அதற்குரிய இடப்பட்ட பகுப்பு நீக்கம். ஏனெனில்...இந்த விடயத்தை சற்றே விளக்கமுடியுமா?...மீண்டும் இந்தத் தவறை நான் செய்யாமலிருக்கலாமல்லவா?--Jambolik (பேச்சு) 16:37, 13 திசம்பர் 2014 (UTC)Reply

  • ஏற்கனவே இதுபற்றி நாம் உரையாடி உள்ளோமென்றே எண்ணுகிறேன். தொகுப்பானின் கீழே {{படம்||ta}} என்ற விக்கிக்குறியீடு உள்ளது. அங்கு அமைத்தற்குக் காரணம், ஒரு பயனர் தட்டச்சும் வேலையைக் குறைக்கவே. அதிக தட்டச்சு செய்வதால் மணிக்கட்டு வலி பலருக்கும் தோன்றும். மற்றொன்று, பிற வார்ப்புருக்களைப் போலவே, இதிலும் பகுப்பு தானகத் தோன்றும். பயன்படுத்தும் முறை வருமாறு:-
  • முதலில் இடவேண்டிய படக்கோப்பின் பெயரை நகலெடுத்துக்கொள்ளவும்.
  • படம் இடவேண்டிய பகுதி தமிழ் என்ற தலைப்புக்கு உள்ளே.
  • தொகுப்பானில் கீழே பல விக்கிக்குறியீடுகள் உள்ளன. அவற்றில் படவார்ப்புருவை அழுத்துங்கள்.
  • நகலெடுத்த வார்ப்புருவை ஒட்டி சேமியுங்கள்.
  • உங்களுக்கு படம் பெரியதாகத் தெரிய வேண்டும் என்றால் படவணுக்களை மாற்றுங்கள். இப்பக்கத்தில் செய்தது போல.

இந்நடைமுறையின் நோக்கம் தட்டச்சும் பணியைக் குறைப்பதே ஆகும். படம் பெரிதாக்கப் பட்டால், குறைவான இணைய இணைப்பில் செயற்படுபவருக்கு பக்கத்தோற்றம் விரைவாக வராது. மேலும், குறைந்த அளவு இணைய இணைப்புப் பொதியைப் பெறுபவர்களுக்கு, அவர்களின் பயன்பாட்டின் காரணமாக, அவர்கள் பெற்ற இணைய பயன்பாடு அளவு சீக்கிரம் தீர்ந்து போகும். எனவே, வார்ப்புருவில் உள்ள அளவே போதும் என்பது எனது வேண்டுகோள். படம் ஒரு குறியீடு. வேண்டுபவர் அதனை பெரிதாக்கிக் கொள்ளட்டுமே. நமக்கும் பதிவிடும் நேரம் குறையும். மாற்றுக் கருத்து இருப்பின் தெரிவிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 01:52, 14 திசம்பர் 2014 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கீல்பூசுதல்&oldid=1264827" இலிருந்து மீள்விக்கப்பட்டது