போதாத காலம்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
போதாத காலம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- சாதகமில்லாத காலம்.
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- unfavourable time.
விளக்கம்[தொகு]
- பேச்சு வழக்கில் 'போராத காலம்": ஒருவருக்கு தொடர்ந்து அவர் செய்யும் காரியங்கள் சரியாக அமையாமல் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்தாலோ அல்லது மேன்மேலும் விரும்பத்தாகாத நிகழ்வுகள் அவர் வாழ்வில் நடந்தாலோ அவை நடக்கும் அந்த காலம் அவருக்கு போராத காலமாகும்.
பயன்பாடு[தொகு]
- கமலாவுக்கு என்ன ஆச்சு தெரியுமா? ஆறு மாதமாக அவள் அப்பா உடம்பு சரியில்லாமல் கிடந்து எழுந்தார். இப்போ என்னடா என்றால் அவள் மகன் அடி பட்டு கிடக்கிறானாம்... கேட்ட பண உதவியும் அவளுக்கு கிடைக்கவில்லை... எல்லாம் அவளுடைய போராத காலம்!