மாற்றுக்கு மறுதலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மாற்றுக்கு மறுதலை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இரு குடும்பங்களின் பெண், பிள்ளைகளுக்கானத் திருமணத் தொடர்பு.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. inter family marriage relations in regard to brides and bridegrooms.

விளக்கம்[தொகு]

  • மாற்று(கு) + மறு + தலை = மாற்றுக்கு மறுதலை...இரண்டு குடும்பங்களில் திருமணத்திற்கு பெண்கள் இருக்கின்றனர்...திருமணமாகவேண்டிய ஆண் பிள்ளைகளும் உள்ளனர்... ஓர் ஒப்புதலின் பேரில் அந்த இரு குடும்பங்களின் பெண்களையும் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்குத் திருமணம் செய்துக்கொடுத்து அனுப்பினால் அந்த உறவுமுறையால் ஒரு குடும்பத்தினர் மீது மற்றவருக்கு அச்சம் ஐயம் இல்லாது வலுவுள்ளதாக அமைவதோடு ஒரே நாளில் இரு திருமணங்கள் நடப்பதால் செலவும் வெகுவாகக் குறையும்...இவ்வகை திருமணங்களுக்கு 'மாத்துக்கு மறுதலை' என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள்...அதாவது ஒரு பெண்ணை (ஒரு தலையை) வேறொரு குடும்பத்திற்கு திருமணம் செய்வித்து மாற்றினால், அந்த வேறொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் மாற்றப்பட்ட பெண்ணிற்கு பதிலாக மறு தலையாக திருமண பந்தத்தினால் வந்தடைவாள் என்பது பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாற்றுக்கு_மறுதலை&oldid=1226602" இலிருந்து மீள்விக்கப்பட்டது