அடியாள்
Appearance
அடியாள் (பெ)
- கூலிக்காக ஒருவரின் கட்டளையை நியாய தர்மம் பாராமல் செயல்படுத்துபவன்; அடிக்கும் ஆள்
- குற்றேவல் செய்பவள்/ன்; ஒருவரின் அடியில் வேலை செய்பவள்/ன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hired hand/gun who carries out his boss's orders; hooligan hired to beat up someone
- woman servant; servant, follower
விளக்கம்
{{வரியமை}
- கூலிக்கு அமர்த்தப்பட்டிருந்த அடியாட்கள் திடீரென்று பெரிய கம்பிகளுடன் மேடைக்கு வந்து சென்னைத் தொண்டர்களை நையப் புடைத்தனர். (பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன?, வாலாசா வல்லவன்)
- கூலிப்படைக்கு மேலைநாட்டு ஆய்வுத்தளத்தில் அடியாட்கள் என்பதற்கு அப்பால் எந்த மதிப்பும் இருப்பதில்லை என்பதும் வெளிப்படை. (நமது வரலாற்றாய்வு,கண்ணகி, ஜெயமோகன்)
- என்றென்றைக்கும் தான் அவருடைய அடியாள், அவர் நிராகரித்துத் தள்ளினாலும் அகன்று போக முடியாதவள் என்று உறுதி கூற எண்ணினாள் (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அடியாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +