கடைவழி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடைவழி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- மனிதனின் கடைசிப் பயண வழி
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- The path beyond the death on which the soul travels...
விளக்கம்[தொகு]
- மனிதன் உலகில் உயிர்வாழும்போது பற்பல வழிகளில் அதாவது பாதைகளில்/சாலைகளில் பயணித்திருப்பான்...அனால் அவன் கடைசியாகப் பயணிப்பது இந்தக் கடைவழியில்தான்...மரணத்திற்குப் பின்னும் இறந்த மனிதனின் ஆன்மாவிற்கு வாழ்க்கை இருக்கிறது என்னும் இந்துமதக் கோட்பாடிற்கிணங்க, ஒரு மனிதன் இறந்தபின்னும் அவனுடைய ஆன்மா மேலுலகத்திற்குச் செல்லும் கடைசிப் பாதையே கடைவழி ஆகும்...
இலக்கியம்[தொகு]
"வாதுற்ற அண்ணாமலையர் மலர்ப்பதத்தைப்
போதுற்றபோது புகலுநெஞ்சே இப்பூதலத்தில்
தீதுற்ற செல்வமென் தேடிப்புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!..."
- பட்டிணத்தார்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடைவழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி