கண்மலர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கண்மலர்(பெ)

  1. மலரை ஒத்த கண் (உருவகம்)
    கண்மலர் கருணை நீராட்டி (வில்லி.)
  2. கண்ணைப் போன்ற வடிவம் கொண்ட தகடு
    காளியாட்டம் என்பது இருப்பதிலேயே சிரமமான ஆட்டமாகும். எட்டு கைகள் மற்றும் உடைகள் அலங்காரங்கள், ஆபரணங்கள் என்று சுமார் பத்து கிலோ எடையை தூக்கிக் கொண்டு ஆட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும், ஆடி முடித்த பிறகு மேக்கப்பை கலைக்கவும் இரண்டு மணி நேரமாகும். கண்களுக்கு மேல் கண்மலர் என்ற கண்ணைப்போன்ற வடிவம் கொண்ட இரும்புத் தகடை பொருத்திக் கொள்வோம், இதில் உள்ள ஒரு சிறு ஓட்டையின் மூலம் கிடைக்கும் எழுபது சதவீத பார்வையை வைத்துதான் அரங்கம் முழுவதும் ஆவேசமாக நடனமாடுவோம் (காளியாட்டக் கலைஞர் முத்துக்குமார், தினமலர், 7 செப் 2013)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. eye, when compared with a flower (metaphor)
  2. an eye-shaped object worn around eye during some dance
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்மலர்&oldid=1199311" இலிருந்து மீள்விக்கப்பட்டது