கதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. implement (கருவி என்னும் பொருளில் வரும்போது மட்டும் )
பொருள்

கதி, பெயர்ச்சொல்.

1. விரைதல்; to hasten, move rapidly,

  அரியேறு கதித்த்து பாய்வதுபோல்(கம்பரா.பஞ்சசே. 56);.

2. நடத்தல் (வின்.);; to go, move proceed.

3. எழுதல் (பிங்.);; to rise, to be high, to grow high; to start.

4. நற்கதியடைதல்; to attain final bliss.

  கதிப்பவ ரில்லை யாகும்(சி.சி.146 சிவஞா.);

5. பருத்தல்; to become large, to grow big.

  கதித்தெழுந்த தனம்". (தஞ்சைவா. 235);,

6. மிகுதல்; to abound.

  மல்கதிக்க(இரகு. நகரம் 74);.

7. ஒலித்தல்; to sound.

க. கதெ; தெ.கதி.

[கது → கதி. கதித்தல் = விரைதல் (முதா.58); ஒ.நோ. கதழ்தல் = அசைதல், நடத்தல்.]


1. நடை; movement.

2. இயக்கம்; motion.

3. விரைவு; swiftness, rapiditly.

  கதிகெழு களிறு   (கந்தபு.திக்.35);.

4. குதிரை நடை; pace of a horse.

  ஈரிரு கதியு முண்டாங் குலப்பரி யினங்கள்(திருவாத. திருப்பெரு. 114);.

[கது → கதி. கதித்தல் = விரைதல். கதி = விரைவு, வேகம்.]


1. வழி ; way, path.

  கதிநடந் திளைத்த செங்கமலம் பற்றுவோம்(செவ்வந்திப்பு. தாயான. 25);

2. புகலிடம்; refuge.

  எனக்கினிக் கதியென் சொல்லாய்   (திவ்.திருமாலை,30);.

3. அமர ருலகு; heaven, final beatitude, deliverance from further births, absorption into the deity.

  காதலும் வெறுப்பு நீங்கிக் கதிவிழைந் திருக்கின்றோம்(குற்றா.தல. திருமால். 60);.

4. நிலை; state, condition.

அவன் கதி என்ன வாயிற்று? (உ.வ.);

5. உயிர்கள், தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி நரககதி என நான்கு நிலைகளாக எடுக்கும் பிறப்பு (சீவக. 374. உரை.);;6. ஆற்றல்; ability, means,

கொடுக்கக் கதியில்லை (உ.வ.);.

[கது → கதி.]


1. பற்றுக்கோடு; support.

2. நிலைமை, இயல்பு; nature, quality, character,

  யானை முழக்கங் கேட்ட கதியிற்றே(பரிபா 8:17);.

3. ஆகூழ் (வின்);,


luck, fortune,

4. படலம் (பிரபுலிங்);; section, chapter.

5. மெய்யியலின் (தத்துவம்); அடிப்படைக் கோட்பாடுகள்; true principles or elementary properties according to sankhya philosophy.

  முதலிரு பத்தைந் தாங்கதி(பிரபுலிங் துதி. 13);.

6. கருவி; means, instrument.

  உலகிற் றிரியுங் கரும கதியாய் (திவ். திருவாய். 6,9,7);.

[கது → கதுவுதல் = பற்றுதல். கது → கதி = பற்றுக்கோடு, தாங்குதல் உற்ற துணை.]


1. நேர்; straight.

2. செம்மை, செப்பம்; correct.

3. ஒழுங்கு; regularity.

மரா; சிந். சீதே; Turkh kader.

[குத்து → குது குது கதி.]






( மொழிகள் )

சான்றுகள் ---கதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கதி&oldid=1897177" இலிருந்து மீள்விக்கப்பட்டது