காடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


காடு (பெ)

துருக்கியில் உள்ள ஒரு காடு
காடு:
வயல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மரங்கள் அடர்ந்த இயற்கை நிலப்பகுதி.
  2. வயல்
  3. சுடுகாடு
  4. வனம்
  5. கான்
மூங்கில் காடு
விளக்கம்

காடு என்பது மரங்கள் அடர்ந்த நிலப்பகுதிக்கு தமிழில் உள்ள ஒரு பெயர். தமிழில் காட்டுக்கு கா, கால், கான், கானகம், அடவி, அரண், அரணி, புறவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல் எனப் பல பெயர்கள் உண்டு. இவை தவிர வனம், ஆரணியம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம் என்னும் சொற்களும் வழங்குகின்றன. இவற்றுள் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளில் காட்டைக் குறிக்கும். வியல் என்பது விரிந்து பரந்த பெருங்காட்டைக் குறிக்கும். வல்லை என்பது அடர்ந்த காடு.முளரி என்பது இடர் மிகுந்த காடு. பழவம் என்பது முதிர்ந்த மரங்கள் நிறைந்த காடு. இப்படியாக ஒவ்வொரு சொல்லும், பொதுவாகவோ சிறப்பாகவோ. ஒவ்வொரு பொருள் பற்றி காட்டைக் குறிக்கும்.

எடுத்துக்காட்டு:
பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு, குறுங்காடு என்றும், சிறு தூறுகள் பம்பின காட்டை அரில், அறல், பதுக்கை என்றும், மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை, சுரம், பொதி என்றும், அரசனது காவலில் உள்ள காட்டைக் கணையம், மிளை, அரண் என்றும் பண்டுதொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர் (பக் 44). இது 1934 இல் வெளிவந்தது. (இரா. இளங்குமரன், மறைமலையடிகள், பக்கம் 112, சாகித்திய அக்காதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசை, 1995)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. forest; jungle; wood
  2. cultivation land ; field
  3. cemetery
  • பிரான்சியம் : forêt
  • கன்னடம்
  1. ಕಾನು
  2. ಕಾಡು
  3. ಅಡವಿ

சொல்வளம்[தொகு]

காடு
காட்டுவளம், காட்டுவாசி, காட்டுப்பயிர், காட்டெருமை
நோக்காடு, சாக்காடு
இடுகாடு, சுடுகாடு, காப்புக்காடு


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

[[பகுப்பு:பெயர்ச்சொற்கள்]

  1. அடவி
  2. ஆரண்யம்
  3. கானம்
  4. சுரம்
  5. வனம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=காடு&oldid=1991310" இலிருந்து மீள்விக்கப்பட்டது