கிரமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கிரமுகம்
கிரமுகம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கிரமுகம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பாக்குமரம்
  2. கமுகுமரம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. areca nut tree

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...क्रमुक...க்1-ரமுக1- ...கிரமுகம்... கிரமுகம் என்னும் பாக்குமரங்களின் பூர்வீகம் மலேசியா அல்லது பிலிஃபைன் என்று கருதப்படுகிறது...உலகில் பசிஃபிக் மண்டல உஷ்ணப் பகுதிகள், ஆசியா, கிழக்கு ஆஃப்ரிகா முதலான இடங்களில் பயிராக்கப்படுகிறது...இந்தியாவில் பரவலாக இருந்தாலும் பெரும் பகுதி கேரள, கர்நாடக, அசாம் மாநிலங்களிலிருந்தே கிடைக்கிறது...

மருத்துவப் பயன்கள்[தொகு]

  1. கிரமுகத்தின் வேரால் பல்லசைவும், வாய்ரணமும் அதன் இளம்குருத்தால் இடுப்புவலியும் நீங்கும்...
  2. குருத்து இலையை இடித்துச் சாறெடுத்து சமன் நல்லெண்ணெய் கூட்டிக் கொதிக்கவைத்துத் தாளக்கூடியச் சூட்டில் இடுப்பில் தளர பூசிவைக்க வலி நீங்கும்.
  3. இதன் வேரைப் பஞ்சுபோல் இடித்து ஒரு குடுவையில் எட்டு மடங்கு நீர்விட்டு நான்கிலொன்றாகக் காய்ச்சி வடிகட்டி, அடிக்கடி வாயிலிட்டுக் கொப்புளித்துவர வாய்ரணமும், பல்லசைவும் போகும்...
  4. இதன் கியாழத்தை ஆறாத கட்டுப் புண்களுக்கு விட்டு அலம்பிவர விரைவில் ஆறும்...
  • இந்த மரத்தின் கொட்டையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பாக்கு, பாக்குப்பொடி மற்றும் சீவல் போன்றவை வெற்றிலை, சுண்ணாம்போடு சேர்த்து தாம்பூலம்போட பயனாகிறது...


( மொழிகள் )

சான்றுகள் ---கிரமுகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரமுகம்&oldid=1218885" இலிருந்து மீள்விக்கப்பட்டது