கைசுத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கை + சுத்தம் (சமசுகிருதம்-शुद्ध--ஸு2த்43)= கைசுத்தம்

பொருள்[தொகு]

  • கைசுத்தம், பெயர்ச்சொல்.
  1. ஊழலற்ற/து/வர்/வன்
  2. கையூட்டு பெறாத/து/வர்/வன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. scam free--person
  2. corruption free--person

விளக்கம்[தொகு]

  • இது பாதி தமிழும் பாதி சமசுகிருதமும் கலந்தச் சொல்...இந்தச்சொல்லின்பொருள் சுத்தமான கைகள் என்பதல்ல...கையூட்டு/இலஞ்சம் வாங்காத, எந்தவிதமான ஊழலும் செய்யாத/ஊழலில் ஈடுபடாதத் தன்மையையும், அத்தகைய குணதிசயத்தைக் கொண்ட நபர்களையும் குறிக்கும் சொல்லாகத் தமிழ்ச் சமூகத்தில் வழங்கி வருகிறது...

பயன்பாடு[தொகு]

  • தற்கால அரசியலில் கைசுத்தமுள்ள தலைவர்களைக் காண்பது ஓர் அரியதான விடயமாகிவிட்டது...
  • இராகவனிடம் எப்படியும் காரியத்தை சாதித்துக்கொள்ளும் உன் உத்தி எடுபடாது...அவர் கைசுத்தம்/அவர் கைசுத்தமானவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கைசுத்தம்&oldid=1394484" இலிருந்து மீள்விக்கப்பட்டது