சுருள்கீரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுருள்கீரை செய்வதற்கு சேப்பங்கீரை
சுருள்கீரை செய்வதற்கு துவரம் பருப்பு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சுருள்கீரை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் தமிழக உணவு.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a food stuff using colocasia leaves.

விளக்கம்[தொகு]

  • மிகச்சுவையான ஓர் உணவு...துவரம் பருப்பை ஊறவைத்து அதோடு காய்ந்த மிளகாய், உப்பு வைத்து அரைத்துக் கொள்வர்...சேப்பங்கிழங்குச் செடியின் பெரிய இலைகளில் அந்தக் கலவையை பரப்பி, சுருட்டி நூலால்கட்டி, பக்குவமாகச் சிறிய துண்டுகளாக வெட்டி, நீராவியில் இட்லியைப்போல் வேகவைத்துக்கொள்வர்...பின்னர் வாணலியில் கடலை எண்ணெய் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் வெந்த கீரைத்துண்டுகளையிட்டு புரட்டி வதக்கி எடுப்பர்...இந்த வெஞ்சனத்தை சாதத்துடன் பிசைந்து உண்ண மிகச்சுவையாகயிருக்கும்...கீரையைச் சுருட்டி செய்வதால் சுருள்கீரை எனப்பட்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சுருள்கீரை&oldid=1225153" இலிருந்து மீள்விக்கப்பட்டது