தேசிய மொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
  • புறமொழிக் கலப்புச்சொல்--சமஸ்கிருதம்--देशीय--தே3ஶீய + தமிழ்--மொழி--
  • தேசிய + மொழி

பொருள்[தொகு]

  • தேசிய மொழி, பெயர்ச்சொல்.
  1. ஒரு நாட்டு மண்ணின் மொழி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. national language

விளக்கம்[தொகு]

  • ஒரு நாட்டில் தோன்றி, வளர்ந்த, அந்த மண்ணுக்குரிய மொழியாக, அந்த நாட்டின் எல்லா/எண் திசைகளிலும்/எல்லாப் பகுதிகளிலும் தாய்மொழியாகப் பெருவாரியான மக்களால் பேசப்படும் மொழியாக, சகலரும் ஒருவருக்கொருவர் தடங்கல் இல்லாமல் சரளமாக உரையாடிக்கொள்ளும் மொழியாக, எழுத்து மற்றும் படிப்புத் தடங்களில் மக்கள் அனைவரும் அறிந்த மொழியாக விளங்கும் மொழி அந்த நாட்டின் தேசிய மொழி ஆகும்...பெரும்பான்மை மக்களுக்குத்தெரியாமல் வழக்கொழிந்துவிட்டாலும், அந்த நாட்டின் பழம் வரலாறு, கலாச்சாரம், இதரப் பெருமைகள் முதலியச் சிறப்புகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும், அந்த மண்ணின் மொழியை, வரலாற்றிலிருந்து/பார்வையிலிருந்து முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுக்காத்து, மேற்கொண்டு வளப்படுத்த, அந்தந்த நாட்டு அரசுகள் அளிக்கும் சிறப்புத் தகுதி தேசிய மொழி எனும் தகுதியும், ஏற்பும்(அங்கீகாரம்) ஆகும்...அந்த நிலையில் ஆட்சி மொழி, கல்வி மொழி என்னும் பெயரில் வேறு மொழிகள் கோலோச்சும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தேசிய_மொழி&oldid=1451137" இலிருந்து மீள்விக்கப்பட்டது