நீலத்தாமரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
நீலத்தாமரை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

நீலத்தாமரை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. நீலோற்பலம், கருநெய்தற்பூ என்னும் மருத்துவ குணமுள்ள மூலிகை மலர்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of Lilium flower blue/black in colour having medicinal values.

விளக்கம்[தொகு]

  • நீல நிறம் கொண்ட நீலத்தாமரை பிரசவித்த பெண்களை நன்கு தேற்றும்...பெரும்பாடு, கபநோய், விஷபாகத்தையும் நீக்கும்...மேலும் இருமல், பித்தம், குமட்டல், மயக்கம், உடல் எரிச்சல், இரத்த மூலம் இவைகளைப்போக்கும்...
  • அன்றே மலர்ந்த பூக்கள் நான்கு ரூபாய் எடை அல்லது நிழலில் உலர்த்தப்பட்ட பூக்கள் இரண்டு ரூபாய் எடை சுத்தமாக ஆய்ந்து ஒரு குடுவையில் போட்டு ஒரு ஆழாக்கு நீர் விட்டு அரை ஆழாக்காகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் இரண்டரை ரூபாய் எடையுள்ள சீனியைக் கூட்டி மீண்டும் சர்பத்துப் பதமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு, இந்தச் சர்பத்தை வேளைக்கு இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு கொடுத்தால் மூளையின் கொதிப்பால் அதிகமான சுரம் போய்விடும்...குறிப்பிடப்பட்ட மற்ற நோய்களுக்கும் மருந்தாகும்...
  • ஸ்ரீலங்கா நாட்டின் தேசிய மலராக நீலத்தாமரை (நீலோற்பலம்)அறிவிக்கப்பட்டுள்ளது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=நீலத்தாமரை&oldid=1986559" இலிருந்து மீள்விக்கப்பட்டது