பகுப்பு பேச்சு:நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நா.கதிரைவேற்பிள்ளையின் அகராதி முதலில் 1899ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த அகராதியை முழுவதுமாக அவரே தயாரிக்கவில்லை. 1842இல் சந்திரசேகர பண்டிதர் என்பவரால் தொகுக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்ட அகராதி ”பெயரகராதி” என்பதாகும். இது வீரமாமுனிவரின் சதுரகராதியில் உள்ள முதல் பகுதியாகிய ”பெயரகராதி”யை விரிவுசெய்வதே. ”யாழ்ப்பாணத்து அகராதி”, ”மானிப்பாய் அகராதி” என்றெல்லாம் வழங்கப்பட்ட சந்திரசேகர பண்டிதரின் இவ்வகராதியை மேலும் விரிவுபடுத்தி ”பேரகராதி” என்னும் பெயருடன் 1893 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, வேதகிரி முதலியார் ஆகியோரால் வெளியிடப்பட்டது. இந்தப் பேரகராதியின் விரிவாகத்தான் 1899ல் ”தமிழ்ப்பேரகராதி” என்னும் பெயரில் நா.கதிரைவேற்பிள்ளையின் அகராதி வெளியாயிற்று. இந்தத் ”தமிழ்ப்பேரகராதி” 1901, 1905 ஆகிய ஆண்டுகளில் மறுபதிப்புகளாக வந்தது. 1907ஆம் ஆண்டு கதிரைவேற்பிள்ளை காலமானார். அவரது வாழ்நாளில் மூன்று பதிப்புகள் வெளியான இவ்வகராதியின் பெயர் ”தமிழ்ப் பேரகராதி” என்பதே.

கதிரைவேற்பிள்ளையின் இவ்வகராதியை 1901, 1905 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டவர் பி.வே.நமச்சிவாய முதலியார் என்பவர். அவரே 1911ல் காஞ்சி நாகலிங்க முதலியாரைக் கொண்டு மேலும் திருத்திய பதிப்பாக வெளியிட்டார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரும் மேரி அரசியாரும் தில்லியில் முடிசூட்டிக்கொண்ட நிகழ்ச்சியை ஒட்டி இப்பதிப்பு வெளியானதால் ”காரனேசன் தமிழ் டிக்சனரி” எனவும் குறிப்பிடப்பட்டது. 1911ம் ஆண்டுப் பதிப்பு 1935ஆம் ஆண்டுவரை தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்தது. ”தமிழ் மொழியகராதி” என்னும் பெயர் 1911ஆம் ஆண்டு முதல் வழங்கி வருவதாகத் தெரிகிறது.மேலும்--04:19, 13 செப்டெம்பர் 2011 (UTC) உழவன் (Info-farmer)+உரை..