பிக்கல் பிடுங்கல்
பிக்கல் பிடுங்கல்
சொல் பொருள்
பிக்கல் – பங்காகச் சொத்தைப் பிரித்துக் கொண்டு போதல். பிடுங்கல் – இடை இடையே பங்காளியரும் பிறரும் வலிந்து பறித்துக் கொண்டு போதல்.
விளக்கம்
பிக்கல் - பிய்த்தல், பிரித்தல், பொருளுக்கு உரிமையுடையார் செயல். பிடுங்கல், பொருள் மேல் பற்றால் உரிமை இல்லாரும் இளக்கம் கண்டு வலிந்து பிடுங்கிக் கொண்டு போதல். “பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லை” என்று பாராட்டுவது உண்டு. பிடுங்குதல் வழிப்பறி போல்வதாம்.