பேச்சு:கும்மிருட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அடர்ந்த இருளுக்கு, கும்மிருட்டுக்கு வீங்கிருள் என்றும் பெயர்.

  • திருஞான சம்பந்தர் திருஓமமாம்புலியூர் என்னும் ஊரில் பாடிய தேவர்ப்பபடலில்
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம்

என்று கூறுகின்றார். ஒன்பதாம் திருமுறையில் திருவிடை மருதூரில்

வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய
    வீங்கிருள் நடுநல்யா மத்தோர்
பையசெம் பாந்தள் பருமணி யுமிழ்ந்து

என்றும், திருமொழியில்

மின்னொத்த நுண்ணிடை யாளைக் கொண்டு* வீங்கிருள் வாயென்றன் வீதி யூடே பொன்னொத்த வாடைகுக் கூட லிட்டுப் போகின்ற போதுநான் கண்டு நின்றேன்*

என்றும் ஆளப்பட்டுள்ளது

--செல்வா 18:55, 1 ஆகஸ்ட் 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:கும்மிருட்டு&oldid=774204" இலிருந்து மீள்விக்கப்பட்டது