பேச்சு:deoxyribonucleic acid

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆக்சிசனற்ற என்பது தவறான வழக்கு என்பது என் கருத்து. ஆக்சிசன் கழன்ற அல்லது ஆக்சிசன் குறைந்த என்று கூறுவது பொருந்தும். deoxy sugar அல்லது டிஆக்சி இனியம் என்பது ஒரு ஐதராக்சைல் (-OH) வினைக்குழுவில் உள்ள ஆக்சிசன் கழன்று/நீங்கி வெறும் ஐதரசன் மட்டும் இருப்பதாகும். ஆனால் இதில் பிற இடங்களில் ஆக்சிசன் உண்டு (ஐதராக்சைல் வினைக்குழுவும் உண்டு). டி ஆக்சி-ரைபோசு என்பது H-(C=O)-(CH2)-(CHOH)3-H என்னும் பொது வாய்பாடு கொண்டது. இதில் ஆக்சிசன் இருப்பதைப் பார்க்கலாம். ரைபோசு என்னும் ஒற்றை இனியம் C5H10O5 என்னும் வாய்பாடு கொண்டது. ஆகவே ஓர் ஆக்சிசன் குறைபாடு/கழல்தல் என்பதை ஆக்சிசனற்ற என்று கூறுதல் பொருந்தாது. (ஆங்கிலச்சொல்லில் deoxy என்று இருந்தபோதிலும்).--செல்வா 02:03, 13 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:deoxyribonucleic_acid&oldid=799530" இலிருந்து மீள்விக்கப்பட்டது