பேச்சு:drift velocity

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Latest comment: 15 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்

ஓங்குக தமிழ் வளம் ! பண்பிற்கினிய பங்களிப்பாளரே!

உங்களின் இப்பங்களிப்பு, மேலும் சிறக்க இணைத்துள்ள இப்படம் நன்றாக இருக்கிறதா? இந்த அசைப்படம் பொருத்தமானது தானே?(தகவலுழவன் 01:27, 3 மே 2009 (UTC))Reply

விளக்கம் குழப்பம் தர வாய்ப்புள்ளது[தொகு]

//மின்னோட்டம் பாயும் ஒரு கடத்தியில், மின்னோட்டத்தின் திசைக்கு எதிராக, ஆனால் மின்னோட்டத்தை விட மிகவும் குறைவான வேகத்தில் செல்லும் கட்டுனா இலத்திரன்களின் (free electrons) திசைவேகம். //

கட்டுறா எதிர்மின்னிகள் (free electrons) ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அலையும் விரைவு அல்லது வேகம் கூடுதலாக இருக்கும் ( 300 கெல்வின் வெப்பநிலையில் ஏறத்தாழ 10<sup7</sup செமீ/நொடி), ஆனால் இது சராசரியாக எத்திசையிலும் மொத்த நகர்வு கொள்ளாத தாறுமாறு ஓட்டம். இது மின்னோட்டம் தருவதல்ல. மின்னோட்டம் தருவது, அதுவும் செலுத்தும் மின்புலத்திற்கு ஏற்ப மின்னோட்டம் தருவது, இந்த drift velocity (உந்துற்ற விரைவு அல்லது விசையூட்டு விரைவு). மின்னோட்டம் என்பதே இந்த விரைவுதானே? கட்டுறா எதிர்மின்னிகள் தாறுமாறாக ஓடும் விரைவு கூடுதலாயினும் அது மின்னோட்டம் தருவதல்லவே. நீங்கள் கூறும் மின்னோட்டத்தை விட மிகவும் குறைவான வேகத்தில் என்னும் கருத்து தவறு என நினைக்கிறேன். அல்லது நீங்கள் கூற வந்ததை நான் புரிந்துகொள்ளவில்லையோ என்று எண்ணுகிறேன். விளக்க வேண்டுகிறேன். மின்னோட்ட அடர்த்தி (ஓரலகு பரப்பளவில் பாயும் மின்னோட்டம் J (ஆம்ப்பியர்/செமீ/2) = (எதிர்மின்னி அடர்த்தி x எதிர்மின்னி மின்மம் x drift velocity) ஆகவே மின்னோட்டத்தின் விரைவு இந்த drift velocity என்னும் உந்துறு விரைவுக்கு நேர் ஈடானது அல்லவா? இந்த உந்துறு விரைவு = . இதில் என்பது ந்கர்மை (= mobility), E என்பது மின்புலம் (வோல்ட்/செமீ) --செல்வா 04:03, 9 ஜூன் 2009 (UTC)

பொதுப்பயனருக்கு புரிய வேண்டுமே என்று எழுதியதில் சில சொற்கள் துல்லியத்தன்மை இல்லாது இருப்பது புரிந்தது. பாடநூல் வரையறை இதோ : வெளிப்புறத்திலிருந்து செயல்படும் மின்புலத்தினால், கடத்தியின் வழியே கட்டுப்பாடற்ற இயக்கத்திலுள்ள எலக்ட்ரான்கள் மீது திணிக்கப்படும் திசைவேகம் இழுப்பு திசைவேகம் எனப்படும் . கொள்கை அளவில் விக்சனரி வரையறைகளை ஏற்கின்றதா அல்லது சொற்களுக்கு பொருள் மட்டும் போதுமா என்ற தெளிவு எட்டப்பட வேண்டும். "விக்சனரி ஒரு synonym provider மட்டுமே" என்று நான் கருதவில்லை. மேலும் ஒரு மிக முக்கிய விடயம். நாம் [விக்கிப்பீடியா நண்பர்கள் உள்பட] சிறிது முயன்றால் விக்சனரியில் ஒரு லட்சம் சொற்கள் என்ற மைல்கல்லை விரைவில் எட்டிட முடியும். நன்றி. பரிதிமதி 11:45 GMT 9 சூன் 2009.

  • "விக்சனரி ஒரு synonym provider மட்டுமே" என்று நான் கருதவில்லை..." உங்களது இந்த கருத்தை, நானும் ஏற்கிறேன்.
  • "விக்சனரி வரையறைகளை ஏற்கின்றதா?" நிச்சயம் வரையறைகளை ஏற்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை தருவதில் தான், சில இடர்பாடுகள் தோன்றுமென கருதுகிறேன்.
(எ.கா)
1) தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம். பல வரையறைகளைத் தரும். காலப்போக்கில் அவற்றிலும் மாறுபாடுகள் தோன்றுவிடுகின்றன.() இணைய இணைப்பில் இல்லாமல் போய்விடுகிறது.
2) இணையத்தில் கிடைக்கும் போது, esnips - (PALS-E-DICTIONARY) போன்ற பிற தளங்களில் சேமித்து, இணைப்பு தரலாமா?
  • இங்ஙனம் வரையறைகளை தந்த பின்பு, தேவைப்படும் அல்லது வேறுபடும் கருத்துக்களை இப்பொழுது இங்கு தருவது போலவே தரப்பட வேண்டுமென நான் கருதுகிறேன்.
  • எல்லாவற்றிற்க்கும் மேலாக சுத்தமான மொழிபயன்பாட்டுத் தன்மை என்பது, பெரும்பான்மையான தமிழர்களிடம் அரிதாகியே வருகிறது.
' ..மெல்ல தமிழினி சாகும்' என்பது பொய்காதோ?(தகவலுழவன் 03:29, 10 ஜூன் 2009 (UTC))

பரிதிமதி, கட்டாயம் வரையறைகள் தரலாம். தருவது வரவேற்கப்பட வேண்டியது. துல்லியம், தெளிவு இரண்டும் முதன்மையானவை. விக்சனரி என்பது யாரும் தொக்குக்ககூடியது என்பதால், கூடியவரை எல்லா இடங்களிலும் தக்க சான்றுகோள்கள் தருவது தேவை என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால். ஒவ்வொரு சொல்லுக்கும் "எடுத்துக்காட்டுகள்" என்று ஒரு தனிப் பிரிவில், தமிழ் எழுத்துலகில் (அல்லது ஒலிப்பதிவாகிய பேச்சுலகில்) எங்கு பதிவாகி உள்ளது என்று எடுத்துக்காட்டலாம். அதாவது இன்ன நூலில், மாதிகையில், கிழமை இதழில், நாளிதழில் என்று எடுத்துக்காட்டு தரலாம். கூடுதலான உழைப்பு இதற்குத் தேவை, ஆனால் செய்வது நல்லது (இயன்றபொழுது, இயன்றவாறு). நூறாயிரம் (இலட்சம்) சொற்களை எளிதாக அடையலாம். முதல் 10 மொழிகளில் ஒன்றாக தமிழ் நிலைத்து இருக்க வேண்டும் என்னும் குறிக்கோளுடன் இயங்கலாம் (ஒரு ஊக்கத்துக்காக). நாம் செய்வது செம்மையானதாக, பயனுடையதாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பது என் தனிக்கருத்து. தகவலுழவன், மொழித்தூய்மை என்று வேண்டியதில்லை, நல்ல தமிழில் இருக்க முற்படலாம். தூய தமிழ்ச்சொற்கள் எளிதாக கிளைக்கும் பண்பு கொண்டவை. பிறபல சொற்களுடன் தொடர்பு சுட்டி நம் புரிந்துகொள்ளும் அறிவை வளர்க்கும். ஆபத்து என்னும் சொல் என்ன பொருள் என்று ஓரளவுக்கு அறிந்தாலும், கருத்தை ஆழப்படுத்தாது, அறிவை வளர்க்காது, எளிதாக கிளைக்காது. ஆகவே நீக்கவேண்டும் என்பதல்ல. இயன்ற இடங்களில் தீநேர்வு, தீவாய்ப்பு, தீங்கு தீநேர்வு எச்சரிக்கை என்பது போல இடத்திற்கு ஏற்றார்போல எழுதினால், எல்லோரும் புரிந்து கொள்ள வாய்ப்பு அதிகம் ஆகும். "பெரும்பானமையான" மக்கள் எப்படி "ஆபத்து" என்று புரியாத, தமிழில் தொடர்பில்லாத ஒரு சொல்லை ஏற்று வழங்குகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள். பல இடங்களில் காணல், பலமுறை எடுத்தாளுதல். அதுபோலவே நல்ல சொற்களை எடுத்தாண்டால் வழக்கூன்றும். நம் கடன் எது சரியோ அதனைக் கூடிய வரையில் நல்லபடியாகச் செய்வது. --செல்வா 16:59, 10 ஜூன் 2009 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:drift_velocity&oldid=633252" இலிருந்து மீள்விக்கப்பட்டது