பேச்சு:drug interaction

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மருந்து பரிமாற்றுச்செயல் சரியான பொருள் தருகிறதா? interaction எனும் போது இரு வெவ்வேறு மருந்துகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய விளைவுகளாகும். இதனை மருந்து இடைத்தாக்கம் என்று கூறலாமா? --சி. செந்தி 18:21, 13 அக்டோபர் 2010 (UTC)Reply

மருந்து பரிமாற்றுச்செயல் என்பது சரியாக இல்லை என்று நினைக்கிறேன். மருந்திடை விளைவு எனலாமா?--செல்வா 22:42, 13 அக்டோபர் 2010 (UTC)Reply
மருந்திடை விளைவு, மருந்திடை வினை இரண்டும் நன்றாக இருக்கிறது, நான் ஒரு கட்டுரையில் தற்போதைக்கு மருந்து இடைத்தாக்கம் என்று குறிப்பிட்டுள்ளேன், செல்வா கூறிய மருந்திடை விளைவு "விளைவு" என்று அதன் செயற்பாட்டை இலகுவாக விளக்குவதால் அதுவே பொருந்தும் எனக் கருதுகிறேன். உங்கள் கருத்தின் பின்னர் கட்டுரையில் மாற்றம் செய்யவேண்டி உள்ளது.--சி. செந்தி 08:13, 14 அக்டோபர் 2010 (UTC)Reply
  • ஒரு உதாரணத்துடன், aspirin எனப்படும் மருந்தை Methotrexate எனப்படும் மருந்துடன் பயன்படுத்தினால், Methotrexate சிறுநீருடன் வெளியேறுவதை அஸ்பிரின் தடுக்கும் இதனால் Methotrexate அளவு உடலில் கூடி ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். ஒரு மருந்து இன்னுமொரு மருந்துடன் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையே drug interaction என்கிறோம், இதனை மருந்துகளுக்கிடையில் ஏற்படும் தாக்கத்தால் ஏற்படும் விளைவு (மருந்தின் பக்க விளைவு(side effect) அல்ல) என்று கருதினால் செல்வா கூறியது சரிஎனப்படுகிறது, அதே நேரத்தில் அந்தத் தாக்கத்தை மட்டும் கருதினால் நீங்கள் கூறியது சரியெனத் தோன்றுகிறது. --சி. செந்தி 16:46, 14 அக்டோபர் 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:drug_interaction&oldid=799709" இலிருந்து மீள்விக்கப்பட்டது