பேச்சு:presbyopia

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • இயற்பியல். வௌளெழுத்து
  • கால்நடையியல். வயது முதிர்ச்சியால் கண்ணில் ஏற்படுத்தும் திறன்

வெள்ளெழுத்து என்றால் நிறக்குருடு, எனவே அதனை நீக்கி உள்ளேன். இந்த சொல்லினைப் பார்த்தால்...

வேர்ச் சொல்: presbys (πρέσβυς), கருத்து "வயது முதிர்ந்தவர்" , புதிய இலத்தின் விகுதி -opia, கருத்து "பார்வை"

இந்தக் குறைபாடு 40 வயதிற்கு மேற்பட்டோருக்கே வருகின்றபடியால்,

  • முது + அகவை+ பார்வை = முதகவைப் பார்வை அல்லது முது அகவைப் பார்வை

எனவே presbyopia என்பதை முதகவைப் பார்வை என்று அழைப்பது பற்றி ஏதேனும் கருத்து இருந்தால் தெரியப்படுத்தவும்.


சி. செந்தி 17:06, 17 ஜூலை 2010 (UTC)

Drsrisenthil! தூரப்பார்வை என்பதும் சரியாக இருக்கும் அல்லவா? -பரிதிமதி 18:16, 17 ஜூலை 2010 (UTC)
வெள்ளெழுத்து என்றால் நிறக்குருடு அல்லவே! தள்ளிவைத்துப் பார்த்தால்தான் தெரியும் என்னும் நிலைக்கு வெள்ளெழுத்து. Long sight. இங்கே வெள் என்பது எட்டிநின்று (விலகி நின்று) பார்த்தலைக் குறிக்கும். சென்னைப் பேரகராதியை பார்த்தால் பெரும்பாலும் ஒருவனுடை) நாற்பது (வயதில் வருவது.)] வெள்ளெழுத்து என்றே குறிப்பிடுகின்றது. எட்டப்பார்வை, கிட்டப்பார்வை என்பன Long-sight, shirt-sight ஆகியவற்றுக்குப் பயன்படும் ஈடானசொற்கள். வெள்ளெழுத்து = எட்டப்பார்வை. --செல்வா 19:25, 17 ஜூலை 2010 (UTC)

வெள்ளெழுத்து presbyopia என்னும் சொல்லிற்குப் பொருந்துமா?[தொகு]

தூரப் பார்வை (அதுவே வெள்ளெழுத்து ஆக இருப்பினும்) என்றால் hypermetropia, hyperopia எனப்படும் குறைபாடுகளையே குறிக்கும், presbyopia பற்றி அல்ல. சென்னைப் பேரகராதியில் பெரும்பாலும் ஒருவனுடை) நாற்பது (வயதில் வருவது.)] என்று கொடுக்கப்பட்டுள்ளது சரியே , ஆனால் Long sight என்கின்ற அர்த்தத்துடன் இதனை எடுக்கலாகாது. இது ஒரு வகையிலான தூரப் பார்வைக் குறைபாடு எனினும் தூரப்பார்வை என்று அழைத்தால் hypermetropia உடன் குழப்பத்தை ஏற்படுத்தும்.
வெள் தூரம் என்று எடுத்தால் பொருந்தலாம், ஆனால் வெள்ளை என்று எடுத்தால் நிறக்குருடுக்கல்லவா பொருந்த வாய்ப்பு உண்டு.

மேலும் விக்சனரியில் colour blindness என்னும் ஆங்கிலச்சொல்லிற்கு வெள்ளெழுத்து எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது, இவை அனைத்தும் http://www.tamilvu.org/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=colour+blindness&OptSearch=&id=All ,

http://www.tamilvu.org/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=presbyopia&OptSearch=Full&id=All&text2=&text1=&link=null&cat=null&book=null இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. :எனவே நிறக்குருடாகவும், தூரப்பார்வையாகவும் ஓரே சொல் வரும் போது தமிழில் மருத்துவம் என்ற நிலைமையில் குழப்பத்தை அல்லவா தோற்றுவிக்கும். எனினும் ஏற்கனவே நான் கூறியது போல தூரப் பார்வை வேறு, presbyopia வேறு.

Presbyopia is often confused with farsightedness, but the two are different. - http://www.webmd.com/eye-health/eye-health-presbyopia-eyes ஆங்கில விக்கிபிடியாவில் http://en.wikipedia.org/wiki/Hypermetropia - Hyperopia is often confused with presbyopia,[2][3] another condition that frequently causes blurry near vision.[4]

மருத்துவச் சொற்களை அதன் மூலச் சொல்லுடன் விளக்கும் போது ஓரே வார்த்தையில் அதன் அர்த்தம் புரிய வாய்ப்புண்டு, எந்தவொரு நோயின் மருத்துவ கலைச்சொல்லும் (ஆங்கிலச்சொல்) இலத்தீன் அல்லது கிரேக்க மூலமாகவே இருக்கும், எனவே இந்தச் சொற்களைப் பார்த்தவுடனேயே அது எதைக் குறிக்கிறது என்கின்ற அர்த்தம் உடனேயே வெளிப்படும். தமிழில் அப்படி மாற்றி அமைத்தால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்று சந்தேகமாகவே உள்ளது, உங்களின் கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. உங்கள் பதில்களை எதிர்பார்க்கின்றேன் இதனை நீக்கவோ அல்லது இந்தப் புதிய பதத்தைப் பயன்படுத்தவோ..(நான் presbyopia பற்றி கட்டுரை எழுதிக்கொண்டு உள்ளேன்) --சி. செந்தி 08:33, 18 ஜூலை 2010 (UTC)

மேலும் சில கருத்துகள்[தொகு]

மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள். இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு உள்ளது, ஆனால் என்ன வேறுபாடு என்பது தெளிவாகத் தெரியவில்லை. presbyopia என்பது கிழவர் (கிழவன், கிழவி)களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடு. hypermetropia என்பது எட்டப் பார்வை myopia என்பது கிட்டப்பார்வை. நீங்கள் presbyopia என்னும் சொல்லுக்குக் குறித்த முது அகவைப் பார்வை சரியான கருத்துப் பெயர்ப்புதான். அதனைச் சுருக்கலாம் (முதியோர் பார்வை -> முதியப்பார்வை, மூப்புப்பார்வை, கிழப்பார்வை??). ஆக்ஃசுபோர்டு அகராதியில் (OED) கீழ்க்காணுமாறு சொற்பிறப்பியல் தந்துள்ளார்கள்:

[< post-classical Latin presbyopia (1756 or earlier; 1745 in post-classical Latin context as a Greek word) < ancient Greek old man (see PRESBYTER n.) + post-classical Latin -opia or its etymon ancient Greek - (see -OPIA comb. form). Compare earlier PRESBYTIA n.]

ஆனால் presbyopia என்பதற்கும், hypermetropia என்பதற்கும், உடல்குறைபாட்டு நோக்கில் தெளிவாக என்ன வேறுபாடு என்று விளங்கவில்லை. விளைவு ஒன்றுதான், ஆனால் ஒன்று அகவை கூடுவதால் நிகழ்வது, மற்றது எந்த அகவையிலும் நேரலாம் (கண் அமைப்பின் குறைபாடால் இருக்கலாம்)என்பது மட்டும்தானா, அல்லது அது நேர்வதிலேயே வெவ்வேறு உடலியக்க வழியாலும், குறைபாட்டிலும் நுட்ப வேறுபாடுகளுடன் காணப்படுமா?

வெள்ளெழுத்து என்பது மங்கலான பார்வையா, எட்டப் பார்வையா என்று உறுதிசெய்ய வேண்டும். எட்டப்பார்வை, கிட்டப்பார்வை, மூப்புப்பார்வை முதலியவற்றை இப்போதைக்கு கருத்தில் கொண்டு கலந்துரையாடி ஏற்கலாம் (அல்லது மாற்றுச் சொல் தேடலாம்).

--செல்வா 15:47, 18 ஜூலை 2010 (UTC)

வணக்கம், மூப்புப்பார்வை என்பது சரியாகப் பொருந்துகிறது. இதனுடன் படிமம் ஒன்றை இணைக்கின்றேன். அது உங்களுக்கு இவற்றிற்கான வேறுபாடுகளை விளக்கும் என்று நம்புகின்றேன். கிட்டப்பார்வையோ அல்லது தூரப்பார்வையோ ஒளிமுறிவுப் பிழையினால் (Refractory error) ஏற்படுவது, இங்கே விழிக்கோளம் நீண்டு அல்லது குறுகலடையும். ஆனால் மூப்புப்பார்வையில் விழிக்கோளம் சாதாரண நபரது போன்றே இருக்கும் (மூப்புப் பார்வையும் மற்றைய குறைபாடுகளும் சேர்ந்து வந்தால் அது வேறு...), ஆனால் இங்கே விழி வில்லையில் குறைபாடு, விழி வில்லையை சுருக்கி விரிக்கும் பிசிர்த்தசையில் குறைபாடு....

---சி. செந்தி 18:19, 18 ஜூலை 2010 (UTC)

மிக்க நன்றி செந்தி :) தெளிவான படம். தூரம் என்பது சமசுக்கிருதச் சொல் என்பதாலும், கிட்ட-எட்ட எனப்படுவது எளிய இணைச் சொற்கள் என்பதாலும் எட்டப்பார்வை என இடலாம் என்பது என் கருத்து. எட்ட நில் என்றால் தள்ளி, எட்டி நில் (சற்று விலகி) என்று பொருள்.ஆகவே பொருத்தமான சொல். தூரம் என்பதற்கு ஈடான தமிழ்ச்சொல் தொலை, தொலைவு. தூரம் என்பது அவ்வளவாக பிறசொற்களோடு இணைவதில்லை, முக்கியமாக கிளைப்பதில்லை. தொல், தொலைவு, தொன் என பொருள் கிளைப்பதைப் பார்க்கலாம். தொல் என்பது காலத்தால் பின்னோக்கி தொலைவில் உள்ளது. தொலைந்து விட்டது என்றால் எங்கோ கண்ணுக்கு எட்டாத இடத்தில் உள்ளது என்று பொருள். தொன் என்பது தொல் என்பதின் மறுவடிவம் தொன்மம் = புராணம், தொன்னம்பிக்கை, தொன்கதை. தமிழ்வேர் உள்ள சொற்களுக்கு இப்படி கிளைக்கும் தன்மை வளரும் தன்மை உண்டு. அபாயம், விபத்து போன்ற சமசுக்கிருதச் சொற்களுக்கு விரிவ்டையும் தன்மை மிகக் குறைவு. விபத்து என்பதை மலேசியத் தமிழ் அறிஞர் சீனி நைனா முகம்மது அவர்கள் இடர்ச்சி என்று கூறினார். உடனே அது இடர், இடறுதல் முதலான தொடர்பான சொற்களை நம் சிந்தையில் தோற்றுவிக்கின்றது. இதுகாறும் தீநேர்வு, நேர்ச்சி என்னும் சொற்களை ஆண்டு வந்தேன். கலைச்சொற்களைக் கூடிய மட்டிலும் நல்ல தமிழ் வேரில் இருந்து படைத்தால் விரிவாக்க கிளைக்க உதவும். தமிழுக்கும் ஆழம் சேர்க்கும் (பிற சொற்களோடு பொருள் நுட்பமாய்ச் சுட்டி வலுவூட்டி நிற்கும்). இவை என் தனிப்பட்ட கருத்துகளே. அதேபோல, சாதாரண பார்வை என்பதைக் குறையிலா என்று மாற்றலாம். தூரப்பார்வை என்பதற்கு எட்டப் பார்வை என்பது பிடிக்கவில்லை எனில் தொலைவுப் பார்வை எனலாம் (தொலைநோக்கு என்பது போல தொலைபார்வை என்றும் சொல்லலாமா அறியேன்). --செல்வா 21:12, 18 ஜூலை 2010 (UTC)

கோடி நன்றிகள், சில அறியாத விடயங்களை புரிய வைத்தமைக்கு.... தூரம் என்பது சமசுக்கிருதச் சொல் என்று அறியேன், இனிமேல் அதனைத் தவிர்ப்பேன், எட்டப் பார்வை என்பது நன்றாகவே அமைகிறது. தரவேற்றிய படிமத்தில் இவ்வாறு எழுதிவிட்டேன், இந்தப் படிமத்தை நீக்கலாம்தானே? புதிதாக எட்டப்பார்வை என்னும் சோல் இணைத்து மீளத்திருத்தம் செய்யவேண்டும். எங்காவது தமிழில் உபயோகிக்கப்படும் அனைத்து சமசுக்கிருத சொற்களின் பட்டியல் உள்ளதா?

--சி. செந்தி 22:23, 18 ஜூலை 2010 (UTC)

  • மிகத்துல்லியமான உங்களின் ஆய்வு கண்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து நீங்கள் இதுபோலவேபகுப்பு:ஆங்கிலம்-மருத்துவம் சொற்களை ஆய்தல் வேண்டும்.மரு.செந்தில் முனைவர்.மரு.செந்தில் ஆக எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். உங்களைப் போன்று துறைசார்ந்த வல்லுனர் தொடர்ந்து அரும்பணியாற்ற வேண்டும். நீங்கள் இணைத்த படம் அருமை. அதனை விக்கி ஊடக நடுவத்தில் பதிவேற்றினால், பிற விக்கித்திட்டங்களிலும் குறிப்பாக (த.வி) பயன்படுத்தலாம்.அதனை 5 நிமிடங்களில் செய்து முடிக்கலாம். வணக்கம்--த*உழவன் 02:25, 19 ஜூலை 2010 (UTC)
    • நன்றி தகவலுழவன் அவர்களே, உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகத்தை அளிக்கின்றது. படிமத்தை பதிவேற்றி விட்டேன் (படத்தின் புதிய பதிப்பு - http://commons.wikimedia.org/wiki/File:Differ-between-eye-errors.png) ஆனால் அதனை எவ்வாறு இங்கு உட்புகுத்துவது (இங்கு காட்டப்பட்ட படத்திற்கு மாற்றீடு செய்யவேண்டும்.) என்பது எனக்குப் புரியவில்லை. --சி. செந்தி 13:12, 20 ஜூலை 2010 (UTC)

செந்தி படத்தில் அதன் பெயரை மாற்றினால், நீங்கள் முன்னர் இட்டப் படத்துக்குப் பகராக புதிய படம் வந்துவிடும். அதாவது [[படிமம்:Differ-between-eye-errors.png|thumb|மூப்புப் பார்வையும் பிற கண்பார்வை குறைபாடுகளும்]] என்று படத்தில் பெயரை மாற்றி இட்டீர்கள் என்றால் முன்னிருந்த படத்துக்குப் பகராக உங்கள் புதிய படம் அவ்விடத்தில் வந்துவிடும். நீங்கள் முயலுங்கள், மாற்ற முடியவில்லை என்றால் நானோ பிறரோ மாற்ற உதவி செய்வோம்.

அடுத்து சமசுக்கிருதச் சொல் பற்றி பல சொற்பட்டிகள் உள்ளன, ஆனால் Tamil Lexicon என்னும் பேரகராதியில் ஒரு சொல்லைப் பார்த்தால் அது எதில் இருந்து வந்தது என்பத பற்றி சுருக்கமாக இருக்கும் (இவை எல்லா நேரங்களிலும் சரியானது என்று கொள்ள முடியாது எனினும்), இதனை அணுகலாம். எ.கா. தூரம் என்பதற்கான பதிவு: தூரம். அங்கே

  • n. < dūra. 1. Remoteness, distance; சேய்மை. (பிங்.) தூரம்போயின (கம்பரா. இராவணன்வதை. 240). 2. Remote relationship; தூரச்சுற்றம்.

எனக் கொடுத்துள்ளார்கள்--செல்வா 15:32, 20 ஜூலை 2010 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:presbyopia&oldid=762404" இலிருந்து மீள்விக்கப்பட்டது