மள்ளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மள்ளர்(பெ)[1][2]

  1. உழவர்
  2. வீரர்
  3. மருதம் நில மக்கள்
  4. தேவேந்திர குல வேளாளர் (மள்ளர்/பள்ளர்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
farmer 
agriculturalist
warrior
Mallar/pallar Community 


விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

மருத நிலா மக்களின் மரபுப் பெயரே 'மள்ளர்' என்பதாகும். 'மள்ளர்' என்பதற்கு 'உழவர்' என்றும், 'வீரன்' என்றும் தமிழ் அகராதிகள் பொருள் கண்டுள்ளன.

 "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திரள் உழவர்க்கும்
   வருந்தகையத்தாகும் மள்ளர் எனும் பெயர்"

“களமர் தொழுவர் மள்ளர் கம்பளர் வினைஞர் உழவர் கடைஞர் இளைஞர் கழனிக் கடைந்தவர் (பெயரே)”

                  (திவாகரம்.130)

என்று குறிப்பிடுகிறது. இதனைப் போன்றே பிங்கல நிகண்டு,

 “களமர் உழவர் கடைஞர் சிலதர்
  மள்ளர் மேழியர் மருதமாக்கள்” 
                   (பிங்கலம்.132)

என்று மருதநில மக்களில் ஆறு பிரிவினராகவும், மருதநில மக்கள்

  “களமரே தொழுமரே மள்ளர்
   கம்பளர் உழவரொடு வினைஞர் 
   கடைஞர்” 
                    (சூடாமணி.71)


ஆதாரங்கள் ---மள்ளர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மள்ளர்&oldid=1996496" இலிருந்து மீள்விக்கப்பட்டது