மாங்குயில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
வளர்ந்த மாங்குயில் (Golden oriole)

மாங்குயில் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை; இது பெரிய மரங்களில் காணப்படும். கூச்சல் நிறைந்த நகரங்களிலும் பூங்காக்களிலும் கூட காணப்படும். தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர் கருந்தலை மாங்குயில்[1]
மொழிபெயர்ப்புகள்
  1. Golden Oriole, Eurasian Golden Oriole, European Golden Oriole, Oriolus oriolus ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • வண்ணாந்துறைகளில் இவை காணப்படுவதால் இதற்கு வண்ணாத்திக் குருவி ( magpie robin )என்றும் ஒரு பெயர் உண்டு. மாங்குயில், மணிப் புறாவை ( spotted dove )அடிக்கடி காண முடிகின்றது. இந்த இடத்தில் உட்கார்ந்தபடியே இதுவரை முப் பத்திமூன்று வகைப் புள்ளினங்களை நாங்கள் பதிவு செய்திருக்கின்றோம். -( சு.தியடோர் பாஸ்கரன், வீட்டைச் சுற்றியும் காட்டுயிர், உயிர்மை.[2])
  • சிறைச்சாலையை 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை'” என அழைத்தார் புரட்சிப் பாவலர்[3]


(இலக்கியப் பயன்பாடு)

ஆலை யார்புகை முகிலென் றார்ப்பெழச்
சோலை யார்மயில் துள்ளி மாங்குயில்
மாலை யாரிருள் விரும்பு மாக்கள்காண்
மேலை யாரென மெலிந்து தேம்புமால்.

[தேம்பாவணி -வீரமாமுனிவர், முதற்காண்டம் 19][4]


கொட்டும்
மழை தெறித்துவிழும்
மயில்தோகை பூஞ்சிதறல்
மாங்குயிலின் தேன் உதிரும் குரலோ?
மழலை

-தங்கமணி (மார்ச் 2007)[5]

(இலக்கணப் பயன்பாடு)

சான்றுகோள்கள்[தொகு]

ஆதாரங்கள் ---மாங்குயில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாங்குயில்&oldid=1976122" இலிருந்து மீள்விக்கப்பட்டது