முந்நூறு
Appearance
பொருள்
முந்நூறு(பெ)
- மூன்று நூறு = 300
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- three hundred
விளக்கம்
- மூன்று + நூறு= முந்நூறு. (முன்னூறு - பிழை) மூன்று எனும் நிலைமொழியில் இறுதி "று" வும் இடையில் "ன்"னும் கெட்டு, "மூ" எனும் நெடில் "மு'"எனக் குறுகி, திரிந்து, மு+நூறு - முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன. ஐந்து + நூறு - ஐந்நூறு என எழுதிட வேண்டும். இறுதி (து) கெட்டு "ந்" - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் "ந்" தோன்றி ஐந்நூறு ஆகிற்று. ஐநூறு எனில் பிழை. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 16 அக் 2011)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு (புறநா. 100)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முந்நூறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +