மேய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆடு மேய்தல்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மேய்தல், பெயர்ச்சொல்.
  1. விலங்கு முதலியன உணவுகொள்ளுதல்
    (எ. கா.) பெற்றம் . . . மேய்ந்தற்று (குறள். 273) மேயுங் குருகினங்காள் (திவ். திருவாய். 6, 1, 1)
  2. பருகுதல்
    (எ. கா.) கலங்கு தெண்டிரை மேய்ந்து (சீவக. 32)
  3. கெடுத்தல்
    (எ. கா.) இந்த வண்டி மாட்டை மேய்ந்துவிடும் (W.)
  4. அபகரித்தனுபவித்தல்(பேச்சு வழக்கு)
  5. மேற்போதல்
    (எ. கா.) பேச்சில் அவன் எல்லாரையும் மேய்ந்துவிடுவான். -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  6. சஞ்சரித்தல்
    (எ. கா.) உடன்மேயுங் கரு நாராய் (திவ். திருவாய். 6, 1, 2)
  7. விடனாய்த் திரிதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To graze, feed, prey on, as beasts or birds; to gnaw, as white ants To drink To spoil To obtain and enjoy unlawfully To dominate; to surpass To roam To lead a profligate life



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேய்தல்&oldid=1995796" இலிருந்து மீள்விக்கப்பட்டது