விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்)
Appearance
இயற்பியல் என்பது "Physics" என்பதற்குச ஈடாகத் தமிழ்நாட்டில் வழங்கும் தமிழ்ச் சொல்லாகும். இலங்கையில் மாணவர்கள் பௌதீகவியல் என்னும் சொல்லைப் பயன்படுத்திவருகின்றார்கள். இவ்வாறே பல கலைச் சொற்கள் வெவ்வேறாக இவ்விரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. "பயன்படும் இடங்கள்" என்பதன் கீழ்த் தரப்பட்டுள்ள இல என்பது இலங்கையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதையும், தநா என்பது தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது என்பதையும் குறிக்கும்.
தமிழ் | ஆங்கிலம் | பயன்படும் இடம் |
---|---|---|
அகலம் | width | இல, தநா |
அடர்த்தி | density | இல |
அமர்முடுகல் | deceleration | இல |
அழுத்தம் | pressure | இல |
அணுத்திணிவு | atomic mass | இல |
அணுவெண் | atomic number | இல |
அலை | wave | இல |
ஆடி | mirror | இல |
ஆர்முடுகல் | acceleration | இல |
இயக்க சக்தி | kinetic energy | இல |
இலத்திரன் | electron | இல |
இழுவை | tension | இல |
கதி,#வேகம் | speed | இல,தநா |
குவியாடி | convex mirror | இல |
குழியாடி | concave mirror | இல |
உயரம் | height | இல, தநா |
உராய்வு | Friction | இல |
உருகுநிலை | melting point | இல |
ஊடகம் | medium | இல |
ஒலி | sound | இல |
ஒளி | light | இல, தநா |
ஒளித் தெறிப்பு | light reflection | இல |
ஒளி முறிவு | light refraction | இல |
கடத்தல் | conduction | இல |
கதிர்வீச்சு | radiation | இல |
கதிரியக்கம் | radioactivity | இல |
கன அளவு | volume | இல |
கானல் நீர் | mirage | இல |
குவியம் | focus | இல |
கொதிநிலை | boiling poin | இல |
சடத்துவம் | inertia | இல |
சடத்துவத் திருப்பம் | moment of inertia | இல |
தடை (மின்னியல்) | resistance | இல |
தன்னீர்ப்பு | specific gravity | இல |
திணிவு | mass | இல |
நியூத்திரன் | neutron | இல |
நீளம் | length | தநா, இல |
பரப்பளவு | area | இல |
பாரமானி | barometer | இல |
புவியீர்ப்பு | gravity | இல |
புவியீர்ப்பு மையம் | centre of gravity | இல |
புரோத்தன் | proton | இல |
பௌதீகவியல், இயற்பியல் | Phycics | இல,தநா |
மின்சாரம் | electricity | இல |
நிலைமின்சாரம் | static electricity | இல |
ஓட்ட மின்சாரம் | current electricity | இல |
மின் தூண்டல் | induction | இல |
மின்னியல் | -- | இல |
மின்னோட்டம் | electric current | இல |
நேரோட்ட மின்சாரம் | direct current | இல |
ஆடலோட்ட மின்சாரம் | alternate current | இல |
மீடிறன்,அதிர்வேண் | frequency | இல,தநா |
மேற்காவுகை | convection | இல |
வளி,காற்று | air | இல,தநா |
காற்றழுத்தம் | atmospheric pressure | இல |
வளிமண்டலம் | atmosphere | இல |
விசை | force | இல |
படிமம் | image | இல |
உண்மை பிம்பம் | real image | இல |
மாய பிம்பம் | virtual image | இல |
வில்லை | lense | இல |
குவி வில்லை | convex lens | இல |
குழி வில்லை | concave lens | இல |
வெப்பம் | heat | இல |
வெப்பநிலை | temperature | இல |
வெப்பக் கொள்ளளவு | Heat Capacity | இல |